• கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
Wednesday, October 22, 2025
Karurxpress
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
No Result
View All Result
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
No Result
View All Result
Karurxpress
No Result
View All Result
Home Uncategorized

முன்னாள் அதிமுக அமைச்சர்கள் விஜயபாஸ்கர் -கே.பி.அன்பழகன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

karurxpress by karurxpress
May 22, 2023
in Uncategorized
0
முன்னாள் அதிமுக  அமைச்சர்கள் விஜயபாஸ்கர் -கே.பி.அன்பழகன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
288
VIEWS

மே.22.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் கேபி அன்பழகன் ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். கேபி அன்பழகன் உயர்கல்வித்துறை அமைச்சராக ரூ.45.20 கோடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அன்பழகனின் மனைவி மகன்கள் உள்ளிட்ட 11 பேர் மீது 10ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்தது. விஜயபாஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது ரூ.35.79கோடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது .56 இடங்களில் நடைபெற்ற சோதனை அடிப்படையில் 210 பக்கங்கள் உண்ட குற்ற பத்திரிகை அவர் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தவிர குட்கா போதை பொருளை சட்டவிரோதமாக புழக்கத்தில் விட்டு பணம் பெற்றதாக விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடைபெற்றது. அந்த வழக்கு பற்றிய விபரம்-

கடந்த 2017 ஆம் ஆண்டு அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் புதுக்கோட்டை மாவட்டம் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், 2011-12 ம் ஆண்டு முதல் 2018-19ம் ஆண்டு வரைக்குமான காலத்துக்கு 206 கோடியே 42 லட்சம் ரூபாய் வருமான வரி பாக்கியை வசூலிக்கும் வகையில், புதுக்கோட்டையில் உள்ள அவரது நிலங்களை முடக்கியும், மூன்று வங்கிக் கணக்குகளை முடக்கியும் வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்தது.இதை எதிர்த்து முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவிசாரணைக்கு வந்தது,

வருமான வரித்துறையின் வரி வசூல் அதிகாரி குமார் தீபக் ராஜ் பதில் மனுவை அத்துறையின் வழக்கறிஞர் ஏ.பி.சீனிவாஸ் ‌ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார்.அந்த பதில் மனுவில், 2011-12லிருந்து 2018-19ஆம் ஆண்டு வரையிலான காலத்துக்கு உரிய வருமான வரியை செலுத்தும் படி உத்தரவு பிறப்பித்த போதும், வரி செலுத்தாததால் சொத்துகளும், வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது.முடக்கப்பட்ட ஒரு வங்கிக் கணக்கில் 2022-23ஆம் நிதியாண்டில் அரசு, 8 லட்சத்து 50 ஆயிரத்து 226 ரூபாயை செலுத்தி உள்ளது, அந்த கணக்கில் இருந்து சொந்த செலவுக்காக பணம் எடுத்துள்ள நிலையில், தொகுதி பணிகளுக்காக எந்த பணத்தை எடுக்கவில்லை.

சோதனையின்போது சேகரிக்கப்பட்ட ஆதாரங்களிலிருந்து விஜயபாஸ்கர் வரி ஏய்ப்பு செய்ததற்கு ஆதாரம் இருந்ததால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, மதிப்பீட்டு உத்தரவை எதிர்த்த மேல்முறையீடு நிலுவையில் இருந்ததால், வரி பாக்கியில் 20 சதவீதத்தை மட்டும் செலுத்தும்படி கடிதம் அனுப்பியும் செலுத்தவில்லை என்பதால் சொத்துக்களும், வங்கி கணக்கும் முடக்கப்பட்டன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குட்கா நிறுவனத்திடம் 2 கோடியே 45 லட்சமும், சேகர் ரெட்டிக்கு சொந்தமான எஸ்.ஆர்.எஸ் மைனிங் நிறுவனத்திடம் 85 கோடியே 45 லட்சம் ரூபாய் லஞ்சமாக விஜயபாஸ்கர் பெற்றது உறுதியாகியுள்ளது.

மேலும் 30 கோடியே 90 லட்சம் ரூபாய் பணத்தை அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டிருந்த கூவத்தூர் ரிசாட்டுக்கும் விஜயபாஸ்கர் கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக விஜயபாஸ்கருக்கு விளக்கம் அளிக்க வாய்ப்புகள் கொடுக்கப்பட்ட பிறகு தான் மதிப்பீட்டு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டது. சொத்துகளை வேறு யாருக்கும் விற்பதை தடுப்பதற்காகவும், அரசின் வருவாய் நலனை பாதுகாக்கவும் சட்டத்திற்குட்பட்டு சொத்துகள் முடக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஒரே நேரத்தில் பல்வேறு அமைப்புகளிடம் நிவாரணம் கோருவதன் மூலம் மேல்முறையீட்டு நடவடிக்கையை தாமதப்படுத்த விஜயபாஸ்கர் முயற்சிப்பதாகவும், வரி வசூல் அதிகாரியின் உத்தரவில் தலையிட அவசியமில்லை என்பதால், விஜபாஸ்கரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.

2011-2019 ஆம் ஆண்டில் விஜயபாஸ்கரின் குவாரி செலவு மற்றும் வருமான கணக்கு:

குவாரி செலவு மொத்த தொகை – ரூ.664,984,945

குவாரி வருமானம் மொத்த தொகை – ரூ.1,225,808,041

குவாரி ப்ளூமெட்டல் விற்பனை மறைத்த தொகை : 333,412,176

குவாரி இருப்பு மறைத்தல் : 135,728,000

மொத்தம் – ரூ. 469,140,176

மொத்தம் குவாரியில் வரி ஏய்ப்பு: ரூ. 2,359,933,162

2. சேகர் ரெட்டி – ரூ. 854,575,765

3.குட்கா – ரூ. 24,000,000

4.ஆர்.கே.நகர் தேர்தல் – ரூ.184,096,000

5.விஜயபாஸ்கரின் வீட்டில் பறிமுதல் : ரூ. 2,508,350

ஆக மொத்தம் – ரூ. 3,428,203,277.

Related Posts

அரசியல் காழ்ப்புணர்வில் குற்றச்சாட்டுகள்: அமைச்சர் செந்தில் பாலாஜி விளாசல்

அரசியல் காழ்ப்புணர்வில் குற்றச்சாட்டுகள்: அமைச்சர் செந்தில் பாலாஜி விளாசல்

by karurxpress
June 12, 2023
0

ஜூன்.12. கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அவர்...

டாஸ்மாக் இல்லாமல் எடப்பாடி ஆட்சி நடத்தினாரா?.

by karurxpress
May 18, 2023
0

மே.3. டாஸ்மாக் வருமானத்தில் அரசு நடப்பதாக கூறுவது வேதனைக்குரியது. நிர்வாக சீர்திருத்தம் செய்யும்போது,...

தத்தளித்த மின் வாரியம்: உற்பத்தி அதிகரிப்பு: நஷ்டம் குறைப்பு காரணமாக முன்னேற்ற பாதையில் செல்கிறது

by karurxpress
May 18, 2023
0

ஏப்.14. வாரியத்திற்8 உத்திரவுகவழல் மீன் உற்பத்தி வளப்து. குறிப்பாகஏேற்படுத்தப்பட்டுள்ளதுஓப்பிட்டு பாய்கின்றபோது வே தடைப்பற்ற...

முப்படைவீரர்களுக்கு 1.50லட்சம் ராக்கி கயிறுகள்

by karurxpress
May 18, 2023
0

ஆக.2. இந்திய முப்படை வீரர்களுக்கு சாரணர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் சார்பில் அன்பும்...

Load More
  • Trending
  • Comments
  • Latest
கரூரில் குளிக்க சென்றபோது பரிதாபம்: கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

கரூரில் குளிக்க சென்றபோது பரிதாபம்: கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

May 14, 2024
கரூர் மாவட்டம் 10மணி நேரத்தில் 193 மி.மீ. மழை: பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

கரூர் மாவட்டம் 10மணி நேரத்தில் 193 மி.மீ. மழை: பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

May 20, 2024
வீடு புகுந்து நகை கொள்ளை: எதிரிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்: எஸ்.பி பாராட்டு

வீடு புகுந்து நகை கொள்ளை: எதிரிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்: எஸ்.பி பாராட்டு

November 19, 2024
ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன பேரணி

ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன பேரணி

April 26, 2025

கரூர் மாவட்ட திமுக முன்னோடிகள் 270பேருக்கு பொற்கிழி முப்பெரும் விழாவில் செந்தில்பாலாஜி வழங்கினார்

0

ரூ 750 கோடியில் காவிரியில் தடுப்பணை குளித்தலை அருகே அமைச்சர் ஆய்வு

0

கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் கரூர் மாவட்டம் இரண்டாம் இடம்

0

இல்லாத நிறுவனத்தின் ஆய்வறிக்கை பெற்று இயங்கிய கல்குவாரிகளால் பல கோடி அரசுக்கு இழப்பு ஆலோசனை கூட்டத்தில் அதிர்ச்சி தகவல்

0

தன்னார்வ சட்டப் பணியாளர் சேவைக்கு விண்ணப்பிக்கலாம்

October 15, 2025

வாகனங்கள் பொது ஏலம்: காவல்துறை அறிவிப்பு

October 15, 2025

பெங்களூரு- தூத்துக்குடி- பெங்களூரு சிறப்பு ரயில்கள் இயக்கம்

October 14, 2025
போதைப் பொருட்கள் நடமாட்டம்:  புகார் செய்ய புதிய செயலி அறிமுகம்

மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்கள்

October 12, 2025
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்

Copyright @2023 Weboney. All rights Reserved

No Result
View All Result
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்

Copyright @2023 Weboney. All rights Reserved