ஆக.2.
இந்திய முப்படை வீரர்களுக்கு சாரணர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் சார்பில் அன்பும் நன்றியும் தெரிவிக்கும் விதமாக கடந்த 2017ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக ராக்கி (சகோதரத்துவ கயிறுகளை) தயாரித்து கரூர் பரணி பார்க் குழுமம் அனுப்பி வருகிறது.
இந்த ஆண்டு, இந்திய சுதந்திரத்தின் 75ம் ஆண்டு அமுத விழாவை முன்னிட்டு கரூர் பரணி பார்க் குழும ஆசிரியர்கள் தயாரித்த 75,000 திருக்குறள் பொறித்த ராக்கி கயிறுகள் (18 மொழிகளில் 75,000 திருக்குறள் ராக்கிகள்) ; மேலும் பரணி பார்க் சாரணர் மாணவ மாணவியர் தயாரித்த 75,000 மற்ற ராக்கி கயிறுகள் மொத்தம் ஒன்றரை லட்சம் ராக்கி கயிறுகளை பரணி கல்வி வளாகத்தில் இருந்து புதுதில்லி ராணுவ தலைமையகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.