போலியான இயங்காத நிறுவனத்தின் ஆய்வு அறிக்கை அளித்ததாக செய்யப்பட்டதாக பலகோடி குவாரி மோசடி செய்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நாமக்கல் மணியனூர்
2 கிரானைட் குவாரி கருத்துக்கேட்பு கூட்டத்தில் ஆதாரபூர்வமாக தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் அம்பலப்படுத்தினார். அனைத்து கிரானைட் குவாரிகளையும் தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
23-09-2021 நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் – கோட்டாட்சியர் ஆகியோர் முன்னிலையில் பரமத்தி – மணியனூரில்,
சித்தம்பூண்டியில் அமைய இருக்கும்
2 கிரானைட்
குவாரிகளுக்கான கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கருத்து கேட்பு கூட்டத்தில்
கூட்டத்தில் தமிழக சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் ஒருங்கிணைப்பாளர்கள் சண்முகம்- விஜயன்- பொன்னரசு, பொன்னி எரிசாராய ஆலை எதிர்ப்பு போராட்டக் குழு பொறுப்பாளர் சமூக செயல்பாட்டாளர் குன்னமலை குழந்தைவேல், சமூக செயல்பாட்டாளர்கள் தோழர் பூசன், தங்கராஜ், நாகராஜ், செல்லப்பன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.
இந்த கருத்துக் கேட்புக் கூட்டமும் முறையாக யாருக்கும் தெரிவிக்கப்பட்டதால் பொதுமக்கள் பங்கெடுத்துக் கொள்ளவில்லை.
ஆலை நிறுவனத்தினர் ஆந்திரா மற்றும் கர்நாடகத்தில் இருந்து சுமார் பத்துக்கும் மேற்பட்டோரை சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் என அழைத்து வந்திருந்தனர். மற்றும் ஆலை தரப்பில் லாரி இயக்குபவர்கள் உள்ளிட்ட ஆலையால் பல்வேறு பலன் பெறுபவர்கள் 50க்கும் மேற்பட்டோர் பங்கெடுத்துக் கொண்டனர்.
இந்த கருத்துக்கேட்புக் கூட்டத்தில், தொடர்ந்து பல்வேறு தவறுகளை சட்டவிரோத செயல்பாடுகளை அம்பலப்படுத்தி வருவதால் கருத்துக்கேட்பு கூட்டத்தில் விரிவான EIA அறிக்கை, ஒரு மாதமாக கேட்டும் கூட்டம் தொடங்கும் வரையும்- கூட்டம் தொடங்கிய பின்பும் கூட அதிகாரிகள் தர மறுத்தனர் .
மேலும் சுமார் 40 பக்கங்கள் கொண்ட பவர்பாயிண்ட் பிரசண்டேஷன் அறிக்கையையும் தர மறுத்தனர்.
கருத்துக்கேட்பு கூட்டத்தில் இணையத்தில் ஏற்றப்பட்டு உள்ள சுருக்கறிக்கையின் மோசடி அம்பலப்படுத்தியும், பவர்பாயிண்ட் பிரசண்டேஷன் கூட நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் முழுமையாகக் காட்டாமல் பாதியை மறைத்து காட்டியதை முகிலன் பேசினார்.
தொடர்ந்து கிரானைட் குவாரி தரப்பில், நடைபெற்று வரும் பல்வேறு அவலங்களை குறிப்பிட்டார்.
ஊராட்சி மன்றத் தலைவர் உட்பட ஒரு சிலர் எவ்வாறு இந்த ஆலை எதிர்த்து பல ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகிறோம் எங்களுடைய விவசாயம் நீர் நிலம் ஆகியவை வாழ்வாதாரம் எல்லாம் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை தெரிவித்ததை விளக்கினார்.னார்.
உடனே, கிரானைட் குவாரி க்கு ஆதரவாக வந்திருந்தவர்கள் கூட்டமாக சேர்ந்து வந்து பேச அனுமதிக்கக் கூடாது என்றனர்.
கடந்த ஆகஸ்ட் 25-ல் கரூர்- வெள்ளியணை யில் நடந்த கிரானைட் குவாரி தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டத்திலும், ஆகஸ்டு- 26-ல் கரூர் பரமத்தி காட்டுமுன்னூரில் கல்குவாரி களுக்கான நடந்த கருத்து கேட்பு கூட்டத்திலும் குவாரி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் உள்ள குறைபாடுகளை-தவறுகளை சுட்டிக்காட்டி பேசும்பொழுது கிரானைட் மற்றும் கல் குவாரி உரிமையாளர்களால் அழைத்து வரப்பட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போலவே, மணியனூரிலும் நடைபெற்றது .
அதை எதிர்த்து தரையில் அமர்ந்து பேசினர்.ஸமேலும் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களின் தொடர் செயல்பட்டால்தான் தற்போது திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டத்திலிருந்த 64 கல்குவாரிகளும் முறைகேடாக இயங்குகிறது என்று உயர் நீதிமன்றமே அனைத்தையும் மூடி, தவறுக்கு துணை நின்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.
மேலும் சகாயம் தலைமையில் உயர் நீதிமன்றம் அமைத்த குழு, ஓராண்டு காலம் மதுரை மாவட்ட கிரானைட் முறைகேடுகளை ஆய்வு செய்து ஒரு லட்சத்து 13 ஆயிரம் கோடி முறைகேடு நடந்தது கண்டறியப்பட்டு அறிக்கையாக தற்போது நீதிமன்றத்தில் உள்ளது. அதை வெளியிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் இருந்து இங்கு வந்து பிஆர்பி போன்றவர்களின் பினாமி நிறுவனங்கள் சட்டவிரோதமாக நடைபெற்று வரும் கிரானைட் குவாரி உரிமையாளர்களால், பல்லாயிரம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது எனவே போர்க்கால அடிப்படையில் அனைத்து கிரானைட் குவாரிகளை ஆய்வு செய்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காற்று மாசு மூன்று மாதம் ஆய்வு செய்ததாக கூறுகிறார்கள். அதை ஒரு இடத்தில் வைத்து ஆய்வு செய்ய வேண்டுமென்றால் மின்சாரம் தேவை. அப்படிப்பட்ட இடம் இல்லை.குவாரி இயங்கினால் சிஎஸ்ஆர் நிதி, கனிம நிதி ஆகியவை ஊராட்சிக்கு பயன்படும் என்கிறார்கள். ஆனால் குவாரியில் இயங்கும் லாரிகளால் ஊராட்சி போடப்பட்ட சாலைகள் பழுதாகி பல கோடி ரூபாய் குவாரிகளுக்கு லாரியால் பழுதான சாலைகள் சீரமைக்க மக்கள் நிதி செலவிடப்படுகிறது என்பதுதான் உண்மை.
எல்லாவற்றிலும் முத்தாய்ப்பாக, காற்று- மண்- நீர்- ஒலி மாசு ஆகியவை ஆய்வு செய்ததாக ஆய்வறிக்கையில் காட்டப்படும் ஒமேகா லேபரட்டரிஸ் என்ற நிறுவனம் கடந்த 4 ஆண்டுகளாக நாமக்கல்லில் இயங்கவில்லை, அந்த நிறுவனமே அந்த முகவரியில் இல்லை என அதிர்ச்சி தகவலையும் தெரிவித்தனர்.