கரூர்.செப்.20.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் தமிழகம் முழுவதும் 19ஆம் தேதி நடைபெற்றது மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் அந்தந்த மாவட்டங்களில் மெகா முகாம்களுக்கான மையங்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது இந்த மெகா தடுப்பு ஊசி செலுத்தும் முகாமில 201805பேருக்கு தடுப்பூசி செலுத்தி சென்னைமாவட்டம் முதல் இடம் வகிக்கிறது. அதனையடுத்து கரூர் மாவட்டத்தில் 100036 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதால் 2ம் இடம் வகிக்கிறது. கோவை மாவட்டத்தில் 94723பேருக்கு தடுப்பூசி போட்டு 3ம் இடத்தில் உள்ளது. கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருந்த கோவை மாவட்டத்தை விட கரூர் மாவட்டத்தில் பொது மக்களிடையே அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.