மே.3.
டாஸ்மாக் வருமானத்தில் அரசு நடப்பதாக கூறுவது வேதனைக்குரியது. நிர்வாக சீர்திருத்தம் செய்யும்போது, உடனே திரித்து கூறுகிறார்கள். தானியங்கி மது விற்பனை இயந்திர விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கிறார்கள்.
மால்களில் உள்ள டாஸ்மாக் கடைகளின் உள்பகுதியில்தான் தானியங்கி விற்பனை இயந்திரம் உள்ளது. சாலை, பொது இடங்களில் இந்த இயந்திரம் இருப்பது போல எதிர்க்கட்சிகள் பேசி வருகின்றனர்.
மால்களில் டாஸ்மாக் கடைகள் அதிமுக ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டன டாஸ்மாக் நிறுவனத்தை ஒதுக்கிவைத்துவிட்டு ஆட்சி நடத்தியதுபோல எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்.
சென்னை திருமங்கலத்தில் உள்ள வி.ஆர்.மாலில் உள்ள டாஸ்மாக் கடையில் வைக்கப்பட்டுள்ள தானியங்கி மது விற்பனை இயந்திரத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “திமுக ஆட்சி அமைந்த இரண்டு ஆண்டு காலத்தில் இதுவரை 96 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. ஆனால், சில பத்திரிகைகள், தமிழக அரசு டாஸ்மாக் மூலம் வரும் வருமானத்தால் செயல்படுவது போல் செய்தி வெளியிடுவது வேதனை அளிக்கிறது.
முகப்பு
சமீபத்திய செய்திகள்
Partner With Us
தமிழ்நாடு
வெப் ஸ்டோரிஸ்
ஐபிஎல் 2023
தேசம் மற்றும் உலகம்
பொழுதுபோக்கு
விளையாட்டு
லைஃப்ஸ்டைல்
ஜோதிடம்
புகைப்பட கேலரி
வீடியோ கேலரி
Tamil News / Tamilnadu / No Need To Run Government On Revenue Of Tasmac, Says Minister Senthil Balaji
அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி
Tasmac Revenue: டாஸ்மாக் வருமானத்தில் அரசை நடத்த வேண்டிய அவசியமில்லை – அமைச்சர் செந்தில் பாலாஜி சுளீர்!
03 May 2023, 18:05 IST
Karthikeyan S
Minister Senthi Balaji: டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு அரசை நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
சென்னை திருமங்கலத்தில் உள்ள வி.ஆர்.மாலில் உள்ள டாஸ்மாக் கடையில் வைக்கப்பட்டுள்ள தானியங்கி மது விற்பனை இயந்திரத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “திமுக ஆட்சி அமைந்த இரண்டு ஆண்டு காலத்தில் இதுவரை 96 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. ஆனால், சில பத்திரிகைகள், தமிழக அரசு டாஸ்மாக் மூலம் வரும் வருமானத்தால் செயல்படுவது போல் செய்தி வெளியிடுவது வேதனை அளிக்கிறது.
ட்ரெண்டிங் செய்திகள்
Ooty: வலியால் கதறிய மாணவி – துடிதுடிக்கப் படுகொலை – போதையில் இளைஞர் சூறையாட்டம்
OOTY: வலியால் கதறிய மாணவி – துடிதுடிக்கப …
Ragi: ரேஷன் கடையில் கேழ்வரகு வழங்கும் திட்டம் துவக்கம்
RAGI: ரேஷன் கடையில் கேழ்வரகு வழங்கும் தி …
Chennai Metro: செல்லப் பிராணிகளுக்கு தடை – மெட்ரோ ரயில் நிர்வாகம் அதிரடி
CHENNAI METRO: செல்லப் பிராணிகளுக்கு தடை …
’பல்லுயிர்ப்பெருக்கத்தை அழிக்கும்! நிலத்தடி நீரை குறைக்கும்!’ கீழ்பவானி கான்கிரீட் நீர்தடத்திற்கு சீமான் எதிர்ப்பு
’பல்லுயிர்ப்பெருக்கத்தை அழிக்கும்! நிலத் …
மதுபானம் வழங்கும் தானியங்கி இயந்திரம், டாஸ்மாக் கடைகளுக்குள்தான் வைக்கப்பட்டிருக்கிறது. பொது இடங்களில் வைக்கப்படவில்லை. இந்த மாலில் உள்ள கடையை பொறுத்தவரையில் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரைதான் செயல்படுகிறது. டாஸ்மாக் கடையும் அந்த நேரத்தில் மட்டும்தான் இயங்கும். இதை 24 மணி நேரம் பயன்படுத்தலாம், கடைக்கு வெளியே உள்ளது. ATM-ஐ உடைத்து எடுப்பது போல் இதை உடைத்து எடுத்துக் கொள்ளலாம் என்று எல்லாம் தவறான செய்தியைப் பரப்புகின்றனர்.
21 வயதுக்கு குறைவானவர்கள் யாராலும் அதிலிருந்து மதுபானத்தை எடுக்க முடியாது. ஆனால், எதிர்கட்சிகளும், சில ஊடகங்களும் தவறான தகவல்களை வெளியிடுகின்றன. 29 சதவீதம் நாடாளுமன்ற வருகை பதிவு கொண்ட நாடாளுமன்றத்திற்கே போகாதவர் இது குறித்து செய்தி வெளியிடுகிறார்.
2019-இல் தான் இந்த தானியங்கி இயந்திரம் திறக்கப்பட்டது. 2013, 2014, 2018 என 4 ஆண்டுகளில் 4 கடைகளில் அதிமுக ஆட்சியில் தான் திறக்கப்பட்டது. டாஸ்மாக் நிறுவனம், இந்த தானியங்கி இயந்திரத்திற்கு ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை. உள் கட்டமைப்பு வசதிகளை மது நிறுவனங்கள் செய்கின்றன. அதைக் கடைகளில் பயன்படுத்துகிறார்கள்.
எதிர்க்கட்சித் தலைவர் , அன்புமணி உட்பட யாராவது நாடாளுமன்றத்தில் பேசி, இந்தியா முழுவதும் பூரண மது விலக்கு கொள்கையை கொண்டு வர வேண்டியதுதானே. அதற்கு தைரியமில்லை, இங்கு வந்து அரசியல் செய்கிறார்கள். சட்டமன்றத்தில் சில்லறை விற்பனை நடைபெறும் 500 கடைகள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு அரசு நடத்த வேண்டிய அவசியம் திமுக அரசுக்கு இல்லை.” இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: