திமுக முப்பெரும் விழா சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நேற்று நடைபெற்றது திமுக தலைவரும் முதல்வருமான மு க ஸ்டாலின் விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றினார் காணொலி காட்சி மூலம் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது திமுக முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.
கரூர் அட்லஸ் கலையரங்கத்தில் காணொளி காட்சி மூலம் நிகழ்ச்சிஒளிபரப்பப்பட்டது அதன்பிறகு கரூர் மாவட்ட திமுக சார்பில் திமுக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது 270 பேருக்கு தலா ரூபாய் 10 ஆயிரம் வீதம் ரூ 27 லட்சம் மாவட்ட திமுக பொறுப்பாளர். மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கினார். நிர்வாகிகள் கே.சி. பழனிசாமி நன்னியூர் ராஜேந்திரன், மணிராஜ், பரணிமணி, எம்எல்ஏக்கள் மாணிக்கம் இளங்கோ, சிவகாமசுந்தரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
![](https://karurxpress.com/wp-content/uploads/2021/09/IMG-20210915-WA0108.jpg)