நவ.3.
சென்னையில் மழைநீர் தேங்கியுள்ளதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை மக்கள் தங்களை தாங்களே காப்பாற்றிக் கொள்ள வேண்டும் இற்றுப்போன விடியா அரசு என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார்.
சென்னை திரு வி க நகர் பகுதியில் வெள்ள நிவாரண பணிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசுகையில்,
எனக்கு நினைவு தெரிந்த காலம் முதல் சென்னையில் வழக்கமாக தண்ணீர் தேங்கும் பல இடங்களில் இப்போதைய மழைக்கு நீர் தேங்கவில்லை. தென்சென்னை பகுதியில் பெரும்பாலும் பாதிப்பு இல்லை. திருவிக. நகரில் 95% வெள்ளர நீர் உடனடியாக அகற்றப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருத்துவ வசதி தொடர்ந்து வழங்கப்படும். அதிமுக ஆட்சியில் வெள்ளம் ஏற்பட்ட போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு. க. ஸ்டாலின் ஆய்வு செய்யாத பகுதிகளே இல்லை. எதிர்க்கட்சியாக இருந்த போதும் மக்களை தொடர்ந்து சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கியவர் எங்கள் தலைவர். பெருமழை பாதிப்பு என்று கூறும் எடப்பாடி பழனிச்சாமி கடந்த மூன்று நாட்களில் எந்த பகுதிக்காவது வந்தாரா?. யாரையாவது பார்த்தாரா?. நிவாரண பணிகளை எதுவும் செய்தாரா?. என கேள்வி எழுப்பினார்.