• கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
Wednesday, October 22, 2025
Karurxpress
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
No Result
View All Result
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
No Result
View All Result
Karurxpress
No Result
View All Result
Home தமிழகம்

மலைப்பிரதேச 2வது மருத்துவ கல்லூரி: முதல்வர் திறந்து வைத்தார்

karurxpress by karurxpress
April 6, 2025
in தமிழகம்
0
மலைப்பிரதேச 2வது மருத்துவ கல்லூரி: முதல்வர் திறந்து வைத்தார்
198
VIEWS

நீலகிரி மாவட்டத்தில் ரூ.727 கோடியில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் முடிவுற்ற திட்டப்பணிகள் திறந்துவைத்தல் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா. #CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin @evvelu @mp_saminathan @Subramanian_ma pic.twitter.com/BC1T0oYkT8

— TN DIPR (@TNDIPRNEWS) April 6, 2025

இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழக முதல்வர் நீலகிரி மாவட்டம், ஊட்டியில் ரூ.143.69 கோடி செலவில் 700 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திறந்து வைத்தார். உதகையில் புதிதாக 40 ஏக்கர் பரப்பளவில், 700 படுக்கை வசதிகளுடன் 21 துறைகளுடன் அமைக்கப்பட்டுள்ள பன்னோக்கு மருத்துவமனை. இந்தியாவில் சிம்லாவுக்கு அடுத்தபடியாக மலைப் பிரதேசத்தில் கட்டப்பட்ட இரண்டாவது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாகும்.

பின்னர், ஊட்டி அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.494 கோடியே 51 லட்சம் செலவில் 1,703 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, ரூ.130 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டிலான 56 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.102 கோடியே 17 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை 15,634 பயனாளிகளுக்கு வழங்கினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது,-

நீலகிரி நிகழ்ச்சியால், பிரதமர் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.. இதை நான் பிரதமர் மோடியிடம் ஏற்கனவே தெரிவித்து விட்டேன். தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை என தமிழக மண்ணில் இருந்து பிரதமர் மோடி உறுதி அளிக்க வேண்டும். இந்தி திணிப்பு மற்றும் சிறப்பு நிதியை வழங்க மத்திய அரசு மறுக்கிறது.

வக்பு திருத்த சட்டத்தை திமுக கடுமையாக எதிர்த்தது..வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து ஆ.ராசா மூலம் வழக்கு தொடரப்படும். திரும்பிய பக்கம் எல்லாம் இயற்கை எழில், உதகைக்கு வந்ததால் பெருமையடைகிறேன். திமுக ஆட்சியில், நீலகிரியின் வளர்ச்சிக்கு பழங்குடியின மக்கள் வாழும் அனைத்து பகுதிகளுக்கும் மின் இணைப்பு- கூடலூர் பகுதியில் 10 ஆயிரம் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பட்டினி சாவு இல்லாத மாநிலம் என நிரூபித்துள்ளோம். நாட்டிலேயே தமிழ்நாடு அதிக வளர்ச்சியை எட்டியுள்ளது. வாகனங்கள் செல்லாத பகுதிகளில் கூட, மக்களை தேடி மருத்துவம் திட்டம்-

வனவிலங்கு தாக்கி இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி-நீலகிரியில் வீடில்லாதவர்களுக்கு
ரூ.26 கோடியில் கூடலூரில்
கலைஞர் நகர் உருவாக்கப்படும் – “எங்கும் ஏறலாம் – எங்கும் இறங்கலாம்” எனும் ‘ஹாப் ஆன் – ஹாப் ஹாஃப்’ சுற்றுலா முறை, ரூ.5 கோடி மதிப்பீட்டில் 10 புதிய பேருந்துகளுடன் தொடங்கப்படும்!

2009 ல் வெள்ளம். துணை முதலமைச்சர் ஆக இருந்த நான் நேரடியாக வந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினேன். 2019 ல் நிலச்சரிவு ஏற்பட்டபோது இரண்டு நாட்கள் இங்கேயே இருந்தேன். வீடுகளை இழந்தவர்களுக்கு உதவி செய்தோம் ஆறுதல் கூறினோம் அன்றைய ஆட்சியாளர்களை எழுப்பி இங்கு வரவழைத்தோம். நீட் ரத்து தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சி காலத்தில் தான் நீட் தமிழகத்திற்குள் நுழைந்தது. நீட் விலக்கு அழிக்கப்படும் என எங்கள் கூட்டணி உறுதி அளித்து இருந்தது. மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்திருந்தால், நிச்சயம் நீட் விலக்கு கிடைத்திருக்கும். எடப்பாடி பழனிசாமியை கேட்கிறேன். நீட் விலக்கு அளித்தால் தான் பாஜக உடன் கூட்டணி என அறிவிக்க முடியுமா? – பாஜக கூட்டணிக்கு செல்லும் முன், நீட் தேர்வு விலக்கு தந்தால்தான் கூட்டணி என்று வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா? – என சவால் விடுத்து முதலமைச்சர் பேசினார்.

Related Posts

பாம்பன் புதிய ரயில் தூக்கு பாலம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்

பாம்பன் புதிய ரயில் தூக்கு பாலம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்

by karurxpress
April 6, 2025
0

https://twitter.com/GMSRailway/status/1908791341091373431?t=JCNbs2FDZzZmQbFPLU3MKg&s=19 பாம்பன் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ராமேஸ்வரம் பாம்பன் புதிய...

கோடை காலத்தில் தடையில்லா மின்சாரம்: ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் விரிவான விளக்கம்

கோடை காலத்தில் தடையில்லா மின்சாரம்: ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் விரிவான விளக்கம்

by karurxpress
March 27, 2025
0

மார்ச்.27. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில், நேற்று எதிர்வரும் கோடைகாலத்தில் தமிழ்நாடு...

மின்வாரியம் அன்றும், இன்றும்; அமைச்சர் விளக்கம்:

by karurxpress
March 21, 2025
0

சட்டப்பேரவையில் விவாதத்தில் தங்கமணி பேசும்போது குறுக்கிட்டு விளக்கமளித்த மின்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி...

தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிதி ரூ.2.63 லட்சம் கோடி

by karurxpress
March 20, 2025
0

சட்டப்பேரவையில் பா.ஜ.க உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசும்போது குறுக்கிட்டு நிதி அமைச்சர் தங்கம்...

Load More
  • Trending
  • Comments
  • Latest
கரூரில் குளிக்க சென்றபோது பரிதாபம்: கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

கரூரில் குளிக்க சென்றபோது பரிதாபம்: கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

May 14, 2024
கரூர் மாவட்டம் 10மணி நேரத்தில் 193 மி.மீ. மழை: பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

கரூர் மாவட்டம் 10மணி நேரத்தில் 193 மி.மீ. மழை: பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

May 20, 2024
வீடு புகுந்து நகை கொள்ளை: எதிரிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்: எஸ்.பி பாராட்டு

வீடு புகுந்து நகை கொள்ளை: எதிரிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்: எஸ்.பி பாராட்டு

November 19, 2024
ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன பேரணி

ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன பேரணி

April 26, 2025

கரூர் மாவட்ட திமுக முன்னோடிகள் 270பேருக்கு பொற்கிழி முப்பெரும் விழாவில் செந்தில்பாலாஜி வழங்கினார்

0

ரூ 750 கோடியில் காவிரியில் தடுப்பணை குளித்தலை அருகே அமைச்சர் ஆய்வு

0

கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் கரூர் மாவட்டம் இரண்டாம் இடம்

0

இல்லாத நிறுவனத்தின் ஆய்வறிக்கை பெற்று இயங்கிய கல்குவாரிகளால் பல கோடி அரசுக்கு இழப்பு ஆலோசனை கூட்டத்தில் அதிர்ச்சி தகவல்

0

தன்னார்வ சட்டப் பணியாளர் சேவைக்கு விண்ணப்பிக்கலாம்

October 15, 2025

வாகனங்கள் பொது ஏலம்: காவல்துறை அறிவிப்பு

October 15, 2025

பெங்களூரு- தூத்துக்குடி- பெங்களூரு சிறப்பு ரயில்கள் இயக்கம்

October 14, 2025
போதைப் பொருட்கள் நடமாட்டம்:  புகார் செய்ய புதிய செயலி அறிமுகம்

மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்கள்

October 12, 2025
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்

Copyright @2023 Weboney. All rights Reserved

No Result
View All Result
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்

Copyright @2023 Weboney. All rights Reserved