டிச.16.
இந்தியாவில் வகைப்படுத்தப்படாத துறையில் இருக்கும் ஊழியர்கள் எண்ணிக்கை தான் மிகவும் அதிகம் என்பது அனைவருக்கும் தெரியும், இப்பிரிவில் இருக்கும் கோடிக்கணக்கான ஊழியர்களுக்குப் பிற துறையில் இருக்கும் அதே ஊழியர்கள் பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு கொண்டு வந்த முக்கியமான திட்டம் தான் eShram.
இந்தத் திட்டம் மூலம் மாதம் சம்பளம் இல்லாமல் தினக் கூலி, சுய தொழில், பெட்டிக்கடை, தள்ளுவண்டி வியாபாரிகள், இட்லிக்கடைக்காரர், பூ விற்பவர் முதல் சோமேட்டோ, ஸ்விக்கியில் டெலிவரி செய்வோர், ப்ரீலேன்சர் வேலைகளைப் பார்ப்பவர், பிளம்பர், எலக்ட்ரிஷன் என அனைத்து பிரிவினருக்கும் மத்திய அரசு பாதுகாப்பு அளிக்கிறது.
eShram திட்டம்
eShram திட்டத்தில் பதவி செய்யப்படும் அனைத்து வகைப்படுத்தாத துறை ஊழியர்களுக்கும் 2 லட்சம் ரூபாய் வரையிலான PMSBY விபத்து காப்பீட்டு வழங்கப்படுகிறது. இதுமட்டும் அல்லாமல் வகைப்படுத்தப்படாத துறையில் இருக்கும் ஊழியர்களுக்குப் பல நல திட்டங்களை மத்திய அரசு திட்டமிட்டு வரும் நிலையில், இந்த இன்சூரன்ஸ் முதல் கட்டமாக விளங்குகிறது.
நல திட்டங்கள்
மேலும் எதிர்காலத்தில் eShram தளத்தின் வாயிலாகத் தான் அனைத்து நல திட்டங்களை மத்திய அரசு அளிக்க உள்ளது. உதாரணமாக அவசரக் காலம் அல்லது கொரோனா போன்ற கடுமையான நேரத்தில் வகைப்படுத்தப்படாத துறையில் இருக்கும் பல கோடி ஊழியர்களுக்கு மத்திய அரசு உதவத் தயாராகி வருகிறது.
இதுபோன்ற நல திட்டங்களை வகுக்க முதலில் அரசுக்குத் தரவுகள் தேவை, உதாரணமாக எத்தனை ஊழியர்கள் வகைப்படுத்தப்படாத துறையில் இருக்கிறார்கள், எந்த ஊரில் இருக்கிறார்கள், அவர்களுக்கு வங்கி கணக்கு உள்ளதா என்பது போன்ற அடிப்படை தரவுகள் கிடைத்தால் தான் உதவித் தொகையோ அல்லது நலத் திட்டங்களை அரசால் கொடுக்க முடியும்.
eShram தளம்
இதைத் தரட்டவே மத்திய அரசு eShram தளத்தை உருவாக்கி ஆதார் எண் உடன் வகைப்படுத்தப்படாத துறையில் இருக்கும் பல கோடி ஊழியர்களின் தரவுகளைத் திரட்ட துவங்கியுள்ளது. நீங்கள் வகைப்படுத்தப்படாத துறையில் இருக்கும் பட்சத்தில் eShram தளத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டியது கட்டாயம்.
தேவையான ஆவணங்கள்
eShram தளத்தில் பதிவு செய்யும் முன் போதிய ஆவணங்களைத் திரட்டிக்கொள்ளுங்கள். முதலில் eShram தளத்தில் பதிவு செய்ய ஆதார் எண், ஆதார் எண் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர், வங்கி கணக்கு எண் ஆகியவை அவசியம்.
பதிவு செய்வது எப்படி
படி 1: முதலில் eshram.gov.in தளத்திற்குள் நுழைந்திருங்கள்
படி 2: இத்தளத்தில் முகப் பக்கத்தில் இருக்கும் ‘Register on eSHRAM’ என்பதைக் கிளிக் செய்யுங்கள்
படி 3: உங்கள் ஆதார் எண் இணைக்கப்பட்ட மொபைல் எண்-ஐ பதிவு செய்து Captcha code-ஐ பதிவிட்டு OTP பெறுங்கள்.
படி 4: அதைத் தொடர்ந்து அடுத்து வரும் பக்கத்தில் சில தரவுகளைப் பதிவிட்டாலே போதும் eshram ரிஜிஸ்டர் செய்து விடலாம்.
உங்களிடம் ஆதார் எண் இணைக்கப்பட்ட மொபைல் எண் இல்லையெனில் அருகில் இருக்கும் CSC சென்டருக்கு சென்றால் பயோமெட்ரிக் தரவுகள் அடிப்படையில் ரிஜிஸ்டர் செய்துகொள்ள முடியும்.