• கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
Wednesday, October 22, 2025
Karurxpress
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
No Result
View All Result
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
No Result
View All Result
Karurxpress
No Result
View All Result
Home Uncategorized

அரசியல் காழ்ப்புணர்வில் குற்றச்சாட்டுகள்: அமைச்சர் செந்தில் பாலாஜி விளாசல்

karurxpress by karurxpress
June 12, 2023
in Uncategorized, மாவட்டம்
0
அரசியல் காழ்ப்புணர்வில் குற்றச்சாட்டுகள்: அமைச்சர் செந்தில் பாலாஜி விளாசல்
221
VIEWS

ஜூன்.12.

கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அவர் கூறியது-

முதலமைச்சர் தளபதி அவர்களின் உத்தரவின் பேரில் கோவை மாநகராட்சியில் பழுதடைந்த சாலைகள் சீரமைப்பதற்காக, புதிய தார்ச்சாலைகள் அமைக்க ரூபாய் 200 கோடி சிறப்பு நிதி வழங்கப்பட்டு பணிகள் நிறைவுற்று மக்களுடைய பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று புதிதாக முதல்வர் ஆணைக்கிணங்க 173 கி.மீ.சாலை அமைக்க ரூ. 71 கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 200 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டு மாநகராட்சி நிதியுடன் 260 கோடி ரூபாய் மதிப்பில் மாநகராட்சியில் மட்டும் சாலை பணிகள் மற்றும் எம்ஜிஆர் மார்க்கெட், அண்ணா மார்க்கெட் சீரமைப்பு பணிகளும் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

மின் கட்டணம் குறித்து அரசின் சார்பில் தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்கு எவ்வித கட்டணமும் உயர்வு இல்லை. ஏற்கனவே நடைமுறையில் இருக்கக்கூடிய இலவச மின் திட்டங்கள் தொடர்ந்து வழங்கப்படும். இந்த சிறிய அளவிலான மாற்றம் என்பது ஏற்கனவே ஒன்றிய அரசு அறிவுறுத்தி ஆண்டுக்கு ஏற்படுகின்ற செலவின்ங்களின் அடிப்படையில் கட்டண மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக மின்சாரம் குறித்தோ அரசின்மீதோ அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக, சிலர் வன்மங்களை மனதில் வைத்துக் கொண்டு கூறிக் கொண்டிருக்கிறார்கள். டாஸ்மாக்கில் இரண்டு லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என அன்புமணி கூறியிருக்கிறார் . ஒரு வருஷத்துக்கு விற்பனையே 45 ஆயிரம் கோடி தான். எப்படி இரண்டு லட்சம் கோடிக்கு இழப்பு ஏற்படும். புரியவில்லை. இதை ஆராயாமல் செய்தியாக வெளியிட்டு கேள்வியாகவும் கேட்கப்படுகிறது. கடந்த ஆட்சியில் எவ்வளவு விற்பனை எவ்வளவு இழப்பு என அவர்களிடம் நீங்கள் கேள்வி கேட்டால் அவர்களுக்கும் புரிந்திருக்கும். நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது எங்கேயாவது சேர்ந்து ஒரு சீட் பெற வேண்டும் என்பதற்காக கிருஷ்ணசாமி போன்றவர்கள் கூறி வருகிறார்கள். எவ்வளவு கேள்வி கேட்டாலும் பதில் சொல்கிறார்கள் என்பதற்காக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அவர் சொன்னார் இவர் கூறியிருக்கிறார் என கேள்வி கேட்பது சரியல்ல. நீங்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் கூறும்போதே நீங்கள் அவர்களிடம் கேள்வி கேட்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

பொதுமக்கள் நலன் சார்ந்த பாதிப்பு மற்றும் புகார்களை யார் தெரிவித்தாலும் துறையும் சரி அரசும் சரி கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும். அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கூறப்படும் கருத்துக்களுக்கு பதில் அளிக்க தேவையில்லை.

உங்கள் வீட்டில் வருமானவரித்துறை சோதனை என கேள்வி கேட்டீர்கள் என் வீட்டிற்கு வரவில்லை சார் ‌. எந்தெந்த இடங்களுக்கு சென்றார்களோ அங்கு சோதனைக்கு முழு ஒத்துழைப்பை அளித்திருக்கிறார்கள். என்னென்ன ஆவணங்கள் கேட்டார்களோ முழுமையாக சமர்ப்பித்துள்ளனர். மேலும் கூடுதல் ஆவணங்களை கேட்டாலும் கொடுக்க தயாராக இருக்கிறார்கள் என்றார்.

Related Posts

பெங்களூரு- தூத்துக்குடி- பெங்களூரு சிறப்பு ரயில்கள் இயக்கம்

by karurxpress
October 14, 2025
0

அக். 14 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில்...

காரைக்குடி- கேஎஸ்ஆர். ரயில் மாற்றுப் பாதையில் இயக்கம்

by karurxpress
October 10, 2025
0

கரூர், அக்.10. ரயில் எண்.06243. மைசூர் -காரைக்குடி (கே.எஸ்.ஆர்) பெங்களூரு, பங்காரப்பேட்டை, சேலம்,...

கோவை- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் இயக்கத்தில் மாற்றம்: கட்சிகுடா ரயில் மாற்றுப் பாதையில் இயக்கம்

by karurxpress
October 8, 2025
0

அக்.8.ரயில் சேவைகளில் மாற்றங்கள்  அக்டோபர் 10 & 13, 2025 அன்று அம்பாத்துரை மற்றும்...

நாகர்கோவில்- கோவை ரயில் மாற்றுப் பாதையில் இயக்கம்

by karurxpress
October 2, 2025
0

அக்.2. திண்டுக்கல் ரயில்வே யார்டில் தண்டவாளப் புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தப்...

Load More
  • Trending
  • Comments
  • Latest
கரூரில் குளிக்க சென்றபோது பரிதாபம்: கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

கரூரில் குளிக்க சென்றபோது பரிதாபம்: கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

May 14, 2024
கரூர் மாவட்டம் 10மணி நேரத்தில் 193 மி.மீ. மழை: பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

கரூர் மாவட்டம் 10மணி நேரத்தில் 193 மி.மீ. மழை: பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

May 20, 2024
வீடு புகுந்து நகை கொள்ளை: எதிரிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்: எஸ்.பி பாராட்டு

வீடு புகுந்து நகை கொள்ளை: எதிரிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்: எஸ்.பி பாராட்டு

November 19, 2024
ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன பேரணி

ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன பேரணி

April 26, 2025

கரூர் மாவட்ட திமுக முன்னோடிகள் 270பேருக்கு பொற்கிழி முப்பெரும் விழாவில் செந்தில்பாலாஜி வழங்கினார்

0

ரூ 750 கோடியில் காவிரியில் தடுப்பணை குளித்தலை அருகே அமைச்சர் ஆய்வு

0

கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் கரூர் மாவட்டம் இரண்டாம் இடம்

0

இல்லாத நிறுவனத்தின் ஆய்வறிக்கை பெற்று இயங்கிய கல்குவாரிகளால் பல கோடி அரசுக்கு இழப்பு ஆலோசனை கூட்டத்தில் அதிர்ச்சி தகவல்

0

தன்னார்வ சட்டப் பணியாளர் சேவைக்கு விண்ணப்பிக்கலாம்

October 15, 2025

வாகனங்கள் பொது ஏலம்: காவல்துறை அறிவிப்பு

October 15, 2025

பெங்களூரு- தூத்துக்குடி- பெங்களூரு சிறப்பு ரயில்கள் இயக்கம்

October 14, 2025
போதைப் பொருட்கள் நடமாட்டம்:  புகார் செய்ய புதிய செயலி அறிமுகம்

மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்கள்

October 12, 2025
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்

Copyright @2023 Weboney. All rights Reserved

No Result
View All Result
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்

Copyright @2023 Weboney. All rights Reserved