டிச.24.
கரூர் நகரம் நகராட்சியாக 1874 ஆண்டு உருவாக்கப்பட்டது. 1969 இல் முதல் தரம், 1983ல் தேர்வு தரம், 1980 ல் சிறப்பு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. பின்னர் கரூர் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது. எனினும் தேர்தல் நடைபெறவில்லை. ஊர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்பட்டது. 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கரூர் மாநகராட்சிக்கு முதல் தேர்தல் நடைபெற்றது. 48வார்டுகளுக்கு நடைபெற்ற இந்த தேர்தலில் திமுக 42 இடங்களில் வெற்றி பெற்றது.(ஒரு இடம் போட்டியின்றி தேர்வு). அதிமுக 2, காங் 1, மார்க். கம்யூ1, சுயேட்சை இரு இடங்களில் வெற்றி பெற்றனர்.
தற்போது கரூர் மாநகராட்சியுடன் ஊராட்சிகள் இணைக்கப்படுகின்றன. அதன் விபரம்- திருமாநிலையூர் (பகுதி), ஆண்டாங்கோவில் மேற்கு, ஆண்டாங்கோவில் கிழக்கு, காதப்பாறை, பஞ்சமாதேவி, ஆத்தூர், ஆகிய ஊராட்சிகள் கரூர் மாநகராட்சியுடன் இணைக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.