• கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
Saturday, October 11, 2025
Karurxpress
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
No Result
View All Result
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
No Result
View All Result
Karurxpress
No Result
View All Result
Home மாவட்டம்

வளர் இளம் பெண்களுக்கு இரத்த சோகையை குணப்படுத்தும் திட்டம்: இந்தியாவிலேயே முதன்முறையாக கரூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படுகிறது

karurxpress by karurxpress
June 10, 2023
in மாவட்டம்
0
238
VIEWS

ஜூன்.10.

உதிரம் உயர்த்துவோம் திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில் உள்ள வளர் இளம் பெண்களிடையே ரத்த சோகையை கண்டறிந்து குணப்படுத்தும் திட்டம் செயல்படுத்துவது குறித்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கையேடு வெளியிட்டும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் காணொளி காட்சியை விளக்கியும் கரூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் பிரபு சங்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.

கலெக்டர் கூறியது-

கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படியும். மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வழிகாட்டுதலின்படியும் இந்தியாவிலே முதல்முறையாக ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி செல்லும் வளர் இளம் பெண்களிடையே ரத்த சோகை நோயை கண்டறிந்து குணப்படுத்தும் உத்திரம் உயர்த்துவோம் என்ற திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.

கரூர் மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறை பள்ளிக்கல்வித்துறை மற்றும் பெற்றோர்கள் உள்ளடக்கி கூட்டங்கள் மற்றும் பயிலரங்கங்கள் மூலம் விரிவான திட்டமிடலுக்குப் பிறகு இந்த திட்டம் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு உள்ளது.

கரூர் மாவட்டத்தில் பள்ளிகளில் படிக்கும் 17.740 மாணவிகளுக்கு அவர்களின் பெற்றோர்களின் ஒப்புதலோடு 175 பள்ளிகளில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 7 அரசு மருத்துவமனைகள், மற்றும் எட்டு சமூக சுகாதார மையங்களில் உள்ள 16 ஆய்வகங்கள் மூலம் மருத்துவ குழுக்கள் மூலம் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பரிசோதனைகள் செய்யப்பட்டு முடிவுகள் அறியப்பட்டன.

பரிசோதனை செய்யப்பட்டவர்களில் 45 சதவீதம் பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவன ஆலோசனையின்படி லேசான மற்றும் மிதமான ரத்த சோகை உள்ளவர்கள் மற்றும் தீவிரமான ரத்த சோகை உள்ளவர்கள் என்று வகைப்படுத்தப்பட்டு தீவிர பாதிப்புள்ள 3 சதவீதம் பேருக்கும். லேசான மற்றும் மிதமான பாதிக்கப்பட்ட20.5 சதவீதம் பேருக்கும், லேசாக பாதிக்கப்பட்ட 21% பேருக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. மிதமான பாதிப்புக்கு நாள்தோறும் இரண்டு இரும்புச் சத்து மாத்திரைகள், தீவிர பாதிப்புக்கு சிறப்பு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டு உள்ளது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களுக்குள்ள பல்வேறு பிரச்சனைகள் கண்டறியப்பட்டுள்ளது.
இத்திட்டம் தேசிய அளவில் முன்னெடுக்கப்பட்டுள்ள முன்னோடி திட்டம் ஆகும். நமது மாவட்டத்தில் செயல்படுத்தப்படுவதும் இத்திட்டம் பைலட் திட்டமாக கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பார்வைக்கும், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சருக்கும் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்துவதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாகும்.

வளரிளம் பருவப் பெண்களின் இளம் வயதிலேயே ரத்த சோகையை கண்டறிந்து சரி செய்தால் அவர்களின் வாழ்வில் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய தாக்கத்தை கல்வியை மேம்படுத்துதல் அதன் மூலம் பெண்களுக்கு சமுதாயத்தில் உரிய அதிகாரமளிக்கும். மிக முக்கியமாக இது கர்ப்ப காலத்தில் இரத்த சோகையை தடுப்பதன் மூலம் தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

ஆய்வு முடிவுகளின் படி கடுமையான ரத்த சோகையினால் பாதிக்கப்பட்ட மாணவிகள் அவர்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் மருத்துவ பரிசோதனைக்காக கரூர் மருத்துவர் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு குழந்தைகள் சுகாதார நிறுவனங்களால் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த சோதனைக்கு பிறகு 520 மாணவியர்கள் பல்வேறு உடல்நல பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டு அதில் 121பேருக்கு உரிய சிகிச்சை அளித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் 9 மாணவிகளுக்கு ரத்த நாளங்கள் வழியாக அயன் செலுத்தப்பட்டு ரத்தம் ஏற்றப்பட்டு உள்ளது.

இரண்டாவது கட்டமாக ரத்த சோகையை கண்டறிய இரத்த நாளங்களில் இருந்து ரத்தங்களை எடுத்து பரிசோதிப்பது என்பது ஒன்று மற்றொன்று விரல் நுனியில் இருந்து ரத்தங்களை சேகரித்து நவீன கருவியில் பரிசோதனை செய்யும் மற்றொரு முறையாகும். இதில் பயன்படுத்தப்படும் பல்வேறு உபகரணங்களில் எந்த கருவி மிகவும் துல்லியமாக முடிவுகளை காட்டுகிறது என்பதையும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டு மாநில அரசுக்கு அறிக்கையாக சமர்ப்பித்து உள்ளோம். உதிரம் உயர்த்துவோம் திட்டம் ஒருமுறை செயல்படுத்தும் திட்டமல்ல அது தொடர்ந்து செயல்படுத்தக்கூடியது.

நாங்கள் ஒரு விதையை விதைத்துள்ளோம். இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி ரத்தசோகை இல்லா கரூர் மாவட்டத்தை உருவாக்க அனைவரும் பாடுபடுவோம். இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு உதவிய அனைத்து துறை அலுவலர்களுக்கும் எனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வாணிஸ்வரி. இணை இயக்குனர் மருத்துவ பணிகள் மரு.ரமாமணி. சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் மரு. சந்தோஷ் குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி கீதா. தனித்துணை ஆட்சியர் சைபுதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Posts

காரைக்குடி- கேஎஸ்ஆர். ரயில் மாற்றுப் பாதையில் இயக்கம்

by karurxpress
October 10, 2025
0

கரூர், அக்.10. ரயில் எண்.06243. மைசூர் -காரைக்குடி (கே.எஸ்.ஆர்) பெங்களூரு, பங்காரப்பேட்டை, சேலம்,...

கோவை- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் இயக்கத்தில் மாற்றம்: கட்சிகுடா ரயில் மாற்றுப் பாதையில் இயக்கம்

by karurxpress
October 8, 2025
0

அக்.8.ரயில் சேவைகளில் மாற்றங்கள்  அக்டோபர் 10 & 13, 2025 அன்று அம்பாத்துரை மற்றும்...

நாகர்கோவில்- கோவை ரயில் மாற்றுப் பாதையில் இயக்கம்

by karurxpress
October 2, 2025
0

அக்.2. திண்டுக்கல் ரயில்வே யார்டில் தண்டவாளப் புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தப்...

செங்கோட்டை- ஈரோடு ரயில் இயக்கத்தில் மாற்றம்

by karurxpress
October 2, 2025
0

அக். 2. மதுரை கோட்டத்தில் உள்ள சோழவந்தான்- மதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே...

Load More
  • Trending
  • Comments
  • Latest
கரூரில் குளிக்க சென்றபோது பரிதாபம்: கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

கரூரில் குளிக்க சென்றபோது பரிதாபம்: கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

May 14, 2024
கரூர் மாவட்டம் 10மணி நேரத்தில் 193 மி.மீ. மழை: பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

கரூர் மாவட்டம் 10மணி நேரத்தில் 193 மி.மீ. மழை: பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

May 20, 2024
வீடு புகுந்து நகை கொள்ளை: எதிரிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்: எஸ்.பி பாராட்டு

வீடு புகுந்து நகை கொள்ளை: எதிரிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்: எஸ்.பி பாராட்டு

November 19, 2024
ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன பேரணி

ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன பேரணி

April 26, 2025

கரூர் மாவட்ட திமுக முன்னோடிகள் 270பேருக்கு பொற்கிழி முப்பெரும் விழாவில் செந்தில்பாலாஜி வழங்கினார்

0

ரூ 750 கோடியில் காவிரியில் தடுப்பணை குளித்தலை அருகே அமைச்சர் ஆய்வு

0

கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் கரூர் மாவட்டம் இரண்டாம் இடம்

0

இல்லாத நிறுவனத்தின் ஆய்வறிக்கை பெற்று இயங்கிய கல்குவாரிகளால் பல கோடி அரசுக்கு இழப்பு ஆலோசனை கூட்டத்தில் அதிர்ச்சி தகவல்

0

காரைக்குடி- கேஎஸ்ஆர். ரயில் மாற்றுப் பாதையில் இயக்கம்

October 10, 2025

கோவை- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் இயக்கத்தில் மாற்றம்: கட்சிகுடா ரயில் மாற்றுப் பாதையில் இயக்கம்

October 8, 2025

நாளை பாலக்காடு, திருச்சி ரயில் இயக்கத்தில் மாற்றம்

October 5, 2025
6ம் தேதி முதல் திருமாநிலையூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படும்

நாளை முதல் கரூர் புது பஸ் ஸ்டாண்டில் பேருந்துகள் இயக்கம்

October 5, 2025
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்

Copyright @2023 Weboney. All rights Reserved

No Result
View All Result
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்

Copyright @2023 Weboney. All rights Reserved