கரூர், நவ.21.
கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கணக்கெடுப்பு படி (Enumeration Form) கடந்த 04.11.2025 முதல் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு பூர்த்தி செய்து மீளப்பெறும் பணிகள் நடைபெற்று வருகின்றது.
மேற்படி கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்து வழங்குவதனை எளிமைப்படுத்தும் வகையில் எதிர் வரும் 22.11.2025 (சனிக்கிழமை) மற்றும் 23.11.2025 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரண்டு தினங்களில் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை (SR) கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்திட வாக்காளர்களுக்கு உதவும் பொருட்டு சேவை மையங்கள் (Facilitation Center) அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் அமைக்கப்படவுள்ளன.
அந்தந்த வாக்குச்சாவடி நிலையங்களில் வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவத்தை பூர்த்தி செய்திட, உதவிட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டு, கணக்கெடுப்பு படிவங்கள் பூர்த்தி செய்திட உதவி புரிவார்கள்.
எனவே வாக்காளர்கள் தவறாது இச்சேவையினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.












