கரூர். நவ. 14.
58 -ஆவது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு, சிறை இல்லவாசிகளுக்கான ஓவியப்போட்டி இன்று கரூர் கிளைச் சிறையில் நடைபெற்றது. மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார் தலைமையேற்று ஓவியப்போட்டியை தொடங்கி வைத்தார். கரூர் வட்டாட்சியர் .மோகன்ராஜ் கருத்துரை வழங்கினார்.
தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ஜெகமணி, பசுமை ஒருங்கிணைப்பாளர் பொன்னி ரமேஷ வாழ்த்தி பேசினர். ஓவிய ஆசிரியர் கலைமுதுமணி துரைராஜ் ஓவியப்போட்டி குறித்து விளக்கிக்கூறினார். 41 சிறை இல்லவாசிகள் ஓவியப்போட்டியில் பங்கேற்றனர்.
வாசகர் வட்டத் தலைவர் சங்கர் வரவேற்புரையாற்றினார். கரூர் கிளை சிறை கண்காணிப்பாளர் முருகன் நன்றி கூறினார்.














