மாநில, தேசிய அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற கரூர் பரணி வித்யாலயா யாழினி கண்ணனுக்கு பரணி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. தாளாளர் மோகனரங்கன் தலைமை தாங்கினார். செயலர் பத்மாவதி மோகனரங்கன், முதன்மை முதல்வர் முனைவர் C.ராமசுப்பிரமணியன், அறங்காவலர் சுபாஷினி அசோக்சங்கர், பரணி வித்யாலயா முதல்வர் S.சுதாதேவி, துணை முதல்வர் R.பிரியா முன்னிலை வகித்தனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை யோகா ஆசிரியர்கள் உமா மகேஷ்வரி, வினோதினி, ராணி, சிந்து செய்திருந்தனர்.
இந்திய அரசின் மத்திய கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) பள்ளிகளுக்கு இடையேயான மண்டல அளவிலான தென்னிந்திய யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் யாழினி கண்ணன் தங்கப்பதக்கமும், தேசிய அளவில் (சி.பி.எஸ்.இ) பள்ளிகளுக்கு இடையே நடைபெறும் யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்று அபார சாதனை புரிந்துள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களுக்கு இடையே நடைபெற்ற மாநில அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் ரூ.5000/-க்கான காசோலை, ஆறு அடி கோப்பையை வென்றுள்ளார்.
நந்தா இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் “சாம்பியன் ஆஃப் சாம்பியன்” பட்டம் வென்று பரிசுத்தொகை ரூ.10,000/-க்கான காசோலையும் வென்றுள்ளார்.
“டாக்டர் ராதாகிருஷ்ணன் டிராஃபி” மாநில அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் யாழினி கண்ணன் முதலிடமும் “சாம்பியன் ஆஃப் சாம்பியன்” பட்டமும் வென்றுள்ளார்.












