கரூர், அக்.10.
ரயில் எண்.06243. மைசூர் -காரைக்குடி (கே.எஸ்.ஆர்) பெங்களூரு, பங்காரப்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர் வழியாக) மைசூருவிலிருந்து 11.10.2025 அன்று இரவு 21.20 மணிக்கு புறப்பட திட்டமிடப்பட்டுள்ள இருவார சிறப்பு ரயில், உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளைக் கருத்தில் கொண்டு கே.எஸ்.ஆர் பெங்களூரு – கிருஷ்ணராஜபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையே மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.
இந்த ரயில் யஷ்வந்த்பூர், பனஸ்வாடி, எஸ்.எம்.வி.டி பெங்களூரு மற்றும் பையப்பனஹள்ளி ரயில் நிலையங்கள் வழியாக இயக்கப்படும். இதன் விளைவாக, ரயில் 12.10.2025 அன்று பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் நிறுத்தத்தைத் தவிர்க்கும்.
இத்தகவலை சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.