செப். 26.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொது நூலக இயக்ககத்தின் சார்பாக தமிழ்நாடு முழுவதும் ஊரகம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள மக்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த புதிய நூல்ககளை அமைப்பதற்கு நிதிகளை வழங்கி வருகிறார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.கஸ்டாலின் அவர்கள் இன்று (26.09.2025) சென்னையிலிருந்து காணொளி காட்சி வாயிலாக கரூர் மாவட்டத்தில் ரூ.3.52கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட 16 நூலகக் கட்டடங்களை திறந்து வைத்தார்.
கரூர் மாவட்டம், பவித்திரத்தில் ரூ.22 லட்சம் மதிப்பு, வெள்ளியணை, அரங்கநாதன்பேட்டையில் தலா ரூ.22 லட்சம் மதிப்பில் கிளை நூலக கட்டங்கள், தலா ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் க.பரமத்தியில் ஊர்ப்புற நூலகம். கீழக்குட்டப்பட்டியில் புதிய கட்டட ஊர்ப்புற நூலகம்.
வெண்ணைமலையில் புதிய கட்டட ஊர்ப்புற நூலகம், மின்னாம்பள்ளி, பெரிய காளிபாளையம், புஞ்சைக்கடம்பன் குறிச்சி, தோகைமலை, கேபிதாழைப்பட்டி, வெள்ளியணை சமத்துவபுரம், முஷ்டகிணத்துப்பட்டி, தரகம்பட்டி, ஊர்ப்புற நூலகங்கள்,
புன்னம்சத்திரம், உப்பிடமங்கலம் கூடுதல் கட்டட கிளை நூலகம் என மொத்தம் ரூ.352 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட 16 நூலகக் கட்டடங்களை முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்துள்ளார்கள்.
பொதுமக்கள் இந்நூலகங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென நிகழ்ச்சியில் பங்கேற்ற கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார். ஊராட்சிகளின் உதவி இயக்குநர் சரவணன், மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வி, விஜயலட்சுமி கலந்து கொண்டனர்.