செப்.26.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நான் கூட்டம் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலெக்டர் கூறியதாவது:-
கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களில் போதுமான அளவில் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் யூரியா 567 மெட்ரிக்டன், டிஏபி 770 டன், பொட்டாஷ் 642 டன், என்.பி.கே. மெட்ரிக் 1124 டன் மொத்தம் 3105 மெ.டன் இரசாயன உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் நெற்பயிர் சாகுபடிக்காக கோ55, ஆர்20, BPT, கோ50, 52 ஆகிய நெல் 142650 மெட்ரிக் டன்னும் சிறுதானியங்கள் கம்பு, கோ 10 சோளம் Co32K12-ஆகியவை 52,000 மெட்ரிக் டன்னும், பயறு வகை பயிர்கள் உளுந்து VBNS& VBN. 10. கொள்ளு பையூர் 2 தட்டைப்பயறு VBN3ஆகிய5ை0.000 மெட்ரிக் டன்னும் மற்றும் எண்ணெய் வித்துக்கள் நிலக்கடலை Ka2 கோ.7 என்VRIA டிஎம்வி 7ஆகியலை 3100 மெட்ரிக் டன்னும் இருப்பில் உள்ளது.
கரூர் மாவட்டத்தின் இயல்பான ஆண்டு மழை அளவு 652.20 மி.மீ ஆகும். நடப்பு ஆண்டு செப்டம்பர் 2025 வரை 276.60 மி. மீ. மழை பெய்துள்ளது. 68.06மி.மீ குறைவாக மழை பெய்துள்ளது. கரூர் மாவட்டத்தில் காரீப் பருவத்தில் பெறப்படும் இயல்பான மழையளவு 364.7. மி.மீ. ஆனால் பெறப்பட்ட மழையளவு 276.64 மி.மீ. பருவத்தில் சராசரியாக நெல் 1271 ஹெக்டேர், சிறு தானியங்கள் 3700 ஹெக்டேர், பயறு வகைப் பயிர்கள் 2104 ஹெக்டேர், எண்ணொய் வித்துக்கள் 4025 ஹெக்டேர், பருத்தி 107 ஹெக்டேர் மற்றும் கரும்பு 1000 ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
காரீப் பருவத்திற்கு தேவையான விதைகள் அனைத்து வட்டாரங்களில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு அரசின் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து உரங்களும் போதுமான அளவு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உரக்கடைகளில் இருப்பில் உள்ளதென கலெக்டர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பயிர்களை பூச்சி நோய் தாக்குதலில் இருந்து பாதுகாத்து கொள்வதற்கு ஏதுவாக பூச்சி நோய் விழிப்புணர்வு வழிகாட்டியை விவசாயிகளுக்கு கலெக்டர் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்கள் கண்ணன், விமல்ராஜ், குளித்தலை சார் ஆட்சியர்.சுவாதி ஸ்ரீ, கூட்டுறவு இணைபதிவாளர் அபிராமி. இணை இயக்குநர் வேளாண்மை சிங்காரம். கரூர் வருவாய் கோட்டாட்சியர் முகமது பைசல், வேளாண். அலுவலர் செல்வி, கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குனர் சாந்த கலந்துகொண்டனர்.