செப்.25.
கரூர் கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையினை கலெக்டர் தங்கவேல் குத்துவிளக்கேற்றி வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
இந்தியாவின் மிகப்பெரிய கைத்தறி நிறுவனமாக விளங்கும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் 1935 ம் ஆண்டு தொடங்கப்பட்டு. 90 ஆண்டுகளாக தமிழக அரசு கைத்தறி நெசவாளர்களின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் தொடர்ந்து வேலை வாய்ப்பினை வழங்குவதற்காக, விழா காலங்களில் 30% வரை அரசு சிறப்பு தள்ளுபடி வழங்கி வருகிறது.
இந்தாண்டு தீபாவளி 2025-ல் புதிய வடிவமைப்புகளில், அசல் ஜரிகையுடன் கூடிய காஞ்சிபுரம் பட்டு புடவைகள், ஆரணி பட்டு புடவைகள், சேலம், தஞ்சாவூர் பட்டு புடவைகள் மற்றும் கோவை மென்பட்டு புடவைகள் ஏராளமாக குவிந்துள்ளன. மேலும் கோவை. மதுரை. திண்டுக்கல், பரமக்குடி, திருச்சி மற்றும் சேலம் பகுதிகளில் தயாராகும் அனைத்து இரக பருத்தி புடவைகள் புதிய வடிவமைப்பிலும். மற்றும் களம்காரி பருத்தி புடவைகள் நேர்த்தியான வண்ணங்களிலும் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள
அச்சிடப்பட்ட படுக்கை விரிப்புகள். வேட்டிகள் லுங்கிகள், துண்டுகள். ஜமக்காளம். பருத்தி சட்டைகள், லினன் சட்டைகள், அச்சிடப்பட்ட சட்டைகள் மற்றும் சுருக்கம் அடையாத சட்டைகள் ஏராளமாக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் ஏற்றுமதி இரகங்களான ஏப்ரான், குல்ட். மெத்தைகள். கையுறைகள், டேபுள்மேட் ஸ்கிரின் துணிகள், தலையணை உறையுடன் பிரிண்டட் படுக்கை விரிப்புகள் கூடிய படுக்கை விரிப்புகள் மற்றும் வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு கைத்தறி இரகங்களுக்கு 30% சிறப்பு தள்ளுபடி 15.09.2025 முதல் 30.11.2025 வரை வழங்குகிறது. அனைத்து விடுமுறை நாட்களிலும் விற்பனை நிலையம் செயல்படும். அனைவரும் கைத்தறி துணிகளை வாங்கி நெசவாளர்களுக்கு உதவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் கரூர் மாவட்ட கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையத்திற்க்கு தீபாவளி 2025 பண்டிகைக்கு ரூ.60இலட்சம் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதென கலெக்டர் தெரிவித்தார்.
தீபாவளி 2025 சிறப்பு தள்ளுபடியாக அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு வட்டியில்லா கடன் வசதியில் 30% வரையிலான தள்ளுபடி வழங்குகிறது. இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் கே.எம்.சுதா. கோ-ஆப்டெக்ஸ் மேலாளர் பாலசுப்ரமணியன், விற்பனை நிலைய மேலாளர் மகேஸ்வரி. பணியாளர்கள் உடனிருந்தனர்.