செப். 21.
கரூர் நகர உட்கோட்டம் தாந்தோணிமலை காவல் நிலைய சரகத்தில் கடந்த 09.09.2025 ஆம் தேதி தாந்தோணிமலையில் உள்ள டாஸ்மாக் கடையில் காண்டீபன், வயது 52, சத்தியமூர்த்தி நகர், தாந்தோணிமலை ரூ. 500/- கொடுத்து மதுபானம் வாங்கியபோது மேற்பார்வையாளர் கள்ளநோட்டாக இருப்பதாக சந்தேகத்தின்பேரில் தாந்தோணிமலை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து அவரிடமிருந்து 21 எண்ணிக்கையிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகளை (ரூ. 10,500/-) பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கிளைச்சிறையில் அடைத்தனர்.
இதுதொடர்பாக போலீஸ் ஐ.ஜி. ஜோஷி நிர்மல் குமார் உத்தரவுப்படி கரூர் மாவட்ட எஸ்.பி. ஜோஷ் தங்கையா மேற்பார்வையில், சுரூர் நகர உட்கோட்ட டி. எஸ். பி. செல்வராஜ் தலைமையில், பசுபதிபாளையம் செய்திகள் இன்ஸ்பெக்டர் சதிஸ்குமார் மற்றும் வாங்கல் இன்ஸ்பெக்டர் சையது அலி அடங்கிய தனிப்படையினர் காண்டீபனை விசாரித்தனர். திருச்சியில் ராஜேந்திரன், என்பவரை (மயிலாடுதுறை) கைது செய்து, இரண்டு 500 ரூபாய் கள்ள நோட்டுகளை (ரூ. 1,000/-) பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கிளைச்சிறையில் அடைத்தனர்.
மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய சென்னையில் வசிக்கும் சேலத்தை சேர்ந்த ஜெயக்குமார், வயது 48, என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து கள்ள நோட்டு தயாரிக்கும் உபகரணங்கள் மற்றும் 20 எண்ணிக்கையிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகளை (ரூ. 10,000/-) பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய எதிரிகளை கைது செய்ய தனிப்படையினர் கேரளா மற்றும் ஆந்திரா சென்றனர். அங்கு சானு, வயது 44, குமுளி, ஆந்திராவை சேர்ந்த அர்ஜுன் (எ) விஜயக்குமார் (தற்சமயம்) சென்னை ஆகியோர்களை கைது செய்து சானுவிடம் கள்ளநோட்டு ரூபாய் 6 இலட்சத்தை கைப்பற்றியும் விசாரணை செய்து வருகின்றனர்.
கள்ளநோட்டு வழக்கில் தொடர்புடைய 5 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து வழக்கு தொடர்பான கள்ள நோட்டு, இயந்திரம் மற்றும் உபகரணங்களை கைப்பற்றிய டிஎஸ்பி தலைமையிலான தனிப்படையினரை கரூர் மாவட்ட எஸ். பி. ஜோஷ் தங்கையா பாராட்டி வெகுமதி வழங்கினார்.