செப்.8.
கரூர் மாவட்டத்தின் ஒட்டுமொத்த வர்த்தகத்தை, 50000 கோடியாக உயர்த்தும் நோக்கில், கடந்த வருடம் கரூர் விஷன் 2030 நிகழ்வு நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, கரூர் மாவட்ட Young Indians ஏற்பாட்டில், கரூர் சரஸ்வதி வெங்கட்ராமன் மஹாலில் ‘Yi ignite’ கருத்தரங்கு நடைபெற்றது. கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி சிறப்புரையாற்றினார்.
ஏர்செல் நிறுவனர் சிவசங்கரன், Nativelead Co-founder. நாகபிரகாசம், HAY நிறுவனர், தஹரிநந்தினி சங்கீத், Suxus நிறுவனர்பைசல் ஆகியோர் ஊக்கமாக உரையாற்ற, கரூர் மாவட்டத்தை சேர்ந்த தொழில் முனைவோர்கள் பெரும் திரளாக இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.
எம்எல்ஏ வி.செந்தில் பாலாஜி பேசியதாவது-
விடாமுயற்சியோடு இலக்கை நோக்கி செல்ல வேண்டும். என்னைப் பொறுத்தவரை ஒரு படி ஏறினால் இரண்டு படி சறுக்கியது. அதற்காக அடுத்த அடியை எடுத்து வைக்காமல் இருக்கக் கூடாது. அதிக கஷ்டங்களை அனுபவித்தவன் நான். அதற்காக ஒருபோதும் சோர்ந்ததில்லை. ஐந்து ஆண்டுகளில் 5தேர்தல்களை சந்தித்தவன் நான். பார்ப்பவர்களுக்கு அரசு அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் மரியாதை கொடுக்கிறார்கள் வருகிறார் போகிறார் என்பது மட்டும்தான் தெரியும். ஒரு நிறுவனத்தை நடத்துபவர் காலையில் கடையைத் திறந்தவுடன் எவ்வளவு இருப்பு உள்ளது?. யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும்?. எவ்வளவு பணம் வசூலிக்க வேண்டி இருக்கிறது?. என்பதெல்லாம் உரிமையாளருக்கு மட்டுமே தெரியும் அவரது சிரமம்.
அனைத்து தேர்தல்களையும் சந்தித்து, வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையோடு உங்கள் ஆதரவோடு வெற்றி பெற்று அனைவருக்கும் நன்றி தெரிவிப்பவனாக இருக்கிறேன்.
முதல் தேர்தலில் நான் நின்ற போது எப்படி தேர்தலுக்கு வந்து நிற்கிறீர்கள் என பலர் கேட்டார்கள். அவர்கள் மனதிற்கு அப்படி தெரியும். அடுத்து சொன்னார்கள் இந்த முறை ரொம்ப ‘டஃப்’ ஆக இருக்கும் என்று. அது உங்களுடைய பார்வையில். ஆனால் எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்றேன். அரசியலிலும்சரி, தொழிலாக இருந்தாலும் சரி நம்பிக்கை இருந்தால் அனைவராலும் வெற்றி பெற முடியும். எதை நாம் முன்னெடுக்கிறோமோ அது நடக்கும்.
அதேபோல கரூர் மாவட்டத்தில் ஏற்றுமதி இலக்கை நிச்சயமாக அடைய முடியும். இந்த நம்பிக்கை ஒவ்வொருவருக்கும் இருந்தால் நிச்சயம் இலக்கினை அடைவோம். அரசும், முதலமைச்சரும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். கரூர் மாவட்டத்திற்கு மருத்துவக் கல்லூரிக்கு முயற்சி செய்தேன். நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், கேட்கிறார்கள். புதுக்கோட்டையில் துறை அமைச்சரே இருக்கிறார் கரூருக்கு கிடைக்குமா என்றார்கள். நம்பிக்கையோடு முயற்சித்து முதலில் அரசாணையை பெற்றேன்.என்றார். இதுபோன்று கரூர் மாவட்டத்திற்கு கொண்டு வந்த அரசு நலத்திட்டங்களை பட்டியலிட்டார் செந்தில் பாலாஜி.