செப்.6.
பண்டிகை காலத்தை முன்னிட்டு அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, திருநெல்வேலி- ஷிமோகா டவுன் (கர்நாடகா) இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. கரூர், நாமக்கல், சேலம் வழியாக திருநெல்வேலி-ஷிமோகா டவுன் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் வண்டி எண்.06103 திருநெல்வேலி- ஷிமோகா டவுன் வாராந்திர சிறப்பு ரயில் 07.09.2025 முதல் 26.10.2025 வரை ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 15.40 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 13.00 மணிக்கு ஷிமோகா டவுன் சென்றடையும்.
வண்டி எண்.06104 ஷிமோகா டவுன்- திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் திங்கட்கிழமைகளில் மதியம் 14.20 மணிக்கு ஷிமோகா டவுனில் இருந்து புறப்பட்டு 08.09.2025 முதல் 27.10.2025 வரை (8 சேவைகள்) மறுநாள் காலை 10.45 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும். பெட்டிகள் ஒதுக்கீடு: ஏசி 2-அடுக்கு, ஏசி 3-அடுக்கு, ஸ்லீப்பர் வகுப்பு, பொது இரண்டாம் வகுப்பு & லக்கேஜ்-கம்-பிரேக் வேன் கோச்சுகள்.
நிறுத்தங்கள்: சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, திருத்தங்கல், விருதுநகர், மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், கரூர், நாமக்கல் ரோடு. கிருஷ்ணராஜபுரம், SMVT பெங்களூரு, சிக்க பனவர், தும்கூர், அரசிகெரே, பிரு தரிகெரே மற்றும் பத்ராவதி.
சேலம் கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களின் நேரங்கள் ரயில் எண்.06103 திருநெல்வேலி- ஷிமோகா டவுன் வாராந்திர சிறப்பு ரயில்: (ஞாயிற்றுக்கிழமைகளில்) கரூர் 23.20/23.22 மணி: நாமக்கல்-23.53/23.55 மணி, (திங்கட்கிழமைகளில்) சேலம்-00.50/01.00 மணி. ரயில் எண்.06104 ஷிமோகா டவுன்-தவுநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில்: (செவ்வாய்க்கிழமைகளில்) சேலம்-01.00/01.10 மணி: நாமக்கல்-01.50/01.52 மணி, கரூர்-02:33/02.35 மணி.
மேற்கண்ட தகவலை சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.