கரூரில் பிரம்ம குமாரிகள் அமைப்பின் சார்பில், உலக சகோதரத்துவ நாள், ராஜ யோகினி தாதி பிரகாஷ் மணியின் 18 வது நினைவு நாளை முன்னிட்டு பிரம்ம குமாரிகள் அமைப்பின் சார்பில் கரூர் கொங்கு திருமண மண்டபத்தில் ரத்த தான முகாம் நடைபெற்றது. கரூர் பிரம்ம குமாரிகள் இயக்குனர் ராஜ யோகினி சாரதா ஜி, டாக்டர்கள் வேலுச்சாமி, பாஸ்கர், கருப்பையா, அறிவழகன், மாதவராவ், சரவணன், மற்றும் கணேசன், உத்தமன் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் அருண்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நூற்றுக்கணக்கானவர்கள் முகாமில் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினர்.
கொங்கு, சக்தி நர்சிங் காலேஜ், குமாரசாமி கல்லூரி, ஏ பி டி மாருதி மற்றும் பிரம்ம குமாரிகள் மன்மங்கலம், கரூர். இந்திய மருத்துவ கழகத்தினர் ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.