ஆக.23.
திமுக வழக்கறிஞர்கள் கரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் எஸ்.பி யிடம் புகார் மனு அளித்தனர். பின்னர் வழக்கறிஞர்கள் அணி நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் கூறியது-
கரூரில் உள்ள ஸ்கேன் சென்டரில் நடந்த சம்பவத்திற்கு திமுகவை தொடர்புபடுத்தியும், அதனால் தான் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள் எனவும் தவறான பதிவினை அதிமுக ஐடி. விங் சார்பில் ஒரு நபர் அவதூறு பரப்பி வருகிறார். இருதரப்பிற்கும் வன்முறையை தூண்டி சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணம், விஷமத்தனத்துடன் உண்மைக்கு புறம்பான தகவல்களை பதிவிட்டுள்ளார். மற்றொரு முகநூல் கணக்கிலும் இவ்வாறு செய்தியை பதிந்து பரப்பி வந்துள்ளனர். அதிமுக ஐடி விங் மாவட்ட பொறுப்பாளர் உண்மைக்கு புறம்பான விஷமத்தனமான சங்கதிகளை பரப்பி, அசாதாரண சூழ்நிலை ஏற்படுத்தி வன்முறையை தூண்டும் வகையில், அச்சத்தை ஏற்படுத்தும் விதமாகவும், அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாகவும், அமைந்துள்ளது.
அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தியும் திமுக மற்றும் நிர்வாகிகளுக்கும், மருத்துவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையேயும் வெறுப்புணர்வு ஏற்படுத்தி, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க, கெட்ட எண்ணத்துடன் பதிவிட்ட நபர் மீதும் மற்றும் இவ்வாறான பதிவுகளை பதிவிடும் நபர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுத்து மேற்படி பதிவுகளை நீக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் தாசப்பிரகாஷ், வழக்கறிஞர்கள் குடியரசு, காமராஜ், மணிவாசகம், மகுடேஸ்வரன், பாண்டியன், சண்முகசுந்தரம், மணிவண்ணன், திருஞானம், தனபால், கிருபா, கார்த்திகேயன், பிரசாந்த், சரவணன், கோபாலகிருஷ்ணன், முகமதுஇஸ்மாயில், கதிரேசன், கருணா மூர்த்தி, பாபு ,ரவி, விஜயலட்சுமி ராஜாத்தி, சித்தார்த், வெங்கடேஷ்வரன், நந்தகுமார், அபிலாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.