ஆக.21.
திருக்குறள், தமிழ் மீது கொண்ட ஆர்வம் மிகுதியால் கரூர் வெங்கமேடு பேக்கரி கடை உரிமையாளர் 6 அடி உயரம், இரண்டரை அடி அகலத்தில் 60 கிலோ எடையில் திருவள்ளுவர் உருவத்தை கேக்கில் வடிவமைத்துள்ளார். பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
உலகப் பொது தி்ருமறையான திருக்குறளை வாழ்வின் வழிகாட்டியாக தமிழர்கள் பின்பற்றி வருகின்றனர். தமிழ், திருக்குறள் மீது கொண்ட ஆர்வமிகுதியால் கரூர் வெங்கமேடு பகுதியில் பேக்கரி கடை நடத்தி வரும் மணி . தனது பேக்கரிக்கு அடுமனை என தமிழில் பெயர் சூட்டியுள்ளார். திருக்குறளை பரப்பி வருகிறார். தனது கடையில் 6அடி உயரம், இரண்டரை அடி அகலம் 60 கிலோ எடையில் குமரி முனையில் நின்று கொண்டு இருப்பதைப் போன்று திருவள்ளுவர் கேக் வடிவமைத்து பார்வைக்கு வைத்துள்ளார்.
தனது பேக்கரிக்கு வரும் மக்களிடம் திருவள்ளுவர், திருக்குறள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த மகள் சுதாசினி உதவியோடு திருவள்ளுவர் உருவத்தை கேக்கில் செய்துள்ளார். இந்த புதுமையான திருவள்ளுவர் கேக் காண்பவர் அனைவரையும் கவர்ந்து வருகிறது.
5 பேர் இணைந்து 20 நாட்கள் பணியாற்றி உருவாக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை கேக் 3 மாதத்திற்கு கெடாதவாறு செய்யப்பட்டுள்ளது என மாஸ்டர் மணி தெரிவித்தார். கேக் வடிவமைப்பு வல்லுநர் ஆன இவர் பல்வேறு பிரபல பேக்கரிகளில் மாஸ்டராக பணியாற்றியுள்ளார்.
வித்தியாசமான திருவள்ளுவர் வடிவிலான கேக்’ க்கினை, கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்துவிட்டு அதனை அனைவரிடமும் கூற, மேலும் ஏராளமானோர் குழந்தைகளுடன் வந்து பார்த்து செல்கின்றனர்.
பொதுமக்களிடம் திருக்குறளை ஊக்குவிக்கவிப்பதற்காக முதல் பிறந்தநாளைக் கொண்டாடும் குழந்தைகளுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கி வருகிறார். தற்போது வரை 500 புத்தகங்கள் வழங்கி உள்ளதாகவும், கூறினார். சிறுதானிய உணவு குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் திருவள்ளுவர் கேக் தயாரிக்கப்பட்டதாக கூறினார் திருக்குறள் ஆர்வலர் மணி.