விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. கலெக்டர் பேசுகையில்,
கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களில் போதுமான அளவில் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் நெற்பயிர் சாகுபடிக்காக CO55, R20, BPT, CO50, CO52 ஆகிய நெல் ரகங்கள், சிறுதானியங்கள் கம்பு கோ 10, சோளம்: Co32, K12, பயறு வகை பயிர்கள் உளுந்து, தட்டைப்பயறு, எண்ணெய் வித்துக்கள் நிலக்கடலை இருப்பில் உள்ளது.
கரூர் மாவட்டத்தின் இயல்பான ஆண்டு மழை அளவு 652-20 மி.மீ ஆகும். நடப்பு ஆண்டு ஆகஸ்டு-2025 வரை 209.07 மி.மீ மழை பெய்துள்ளது. 22.53 மிமீ குறைவாக மழை பெய்துள்ளதென கலெக்டர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்கள் கண்ணன். விமல்ராஜ், வேளாண். இணை இயக்குநர் (பொ) உமா. கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் சாந்தி, கலந்து கொண்டனர்.