ஆக.24.
விநாயக சதுர்த்தி விழாவை முன்னிட்டு அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி மைசூர்-திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் வழியாக மைசூர் – திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்கள்
ரயில் எண்.06241 மைசூர் – திருநெல்வேலி சிறப்பு ரயில் 26.08.2025 அன்று இரவு 20.15 மணிக்கு மைசூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 10.50 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.
ரயில் எண்.06242 திருநெல்வேலி- மைசூர் சிறப்பு ரயில் 27.08.2025 அன்று பிற்பகல் 15.40 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 05.50 மணிக்கு மைசூர் சென்றடையும்.
பெட்டிகள்: ஏசி 2-டயர், ஏசி 3-டயர், ஸ்லீப்பர் வகுப்பு, பொது இரண்டாம் வகுப்பு & லக்கேஜ்-கம்-பிரேக் வேன் (மாற்றுத்திறனாளிகளுக்கான தங்குமிட வசதியுடன்) பெட்டிகள்.
நிறுத்தங்கள்: மண்டியா, கெங்கேரி, கேஎஸ்ஆர் பெங்களூரு, பெங்களூரு கண்டோன்மென்ட், கிருஷ்ணராஜபுரம், பங்காரப்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர் மற்றும் கோவில்பட்டி.
சேலம் கோட்டத்தில் நேரங்கள்: ரயில் எண்.06241 மைசூர் -திருநெல்வேலி சிறப்பு ரயில்: (27.08.2025 அன்று) சேலம் 03.15/03.25 மணி; நாமக்கல் 04.29/04.30 மணி; கரூர் 05.18/05.20 மணி; திண்டுக்கல் 07.02/07.05 மணி.
ரயில் எண்.06242 திருநெல்வேலி-மைசூர் சிறப்பு ரயில்: (27.08.2025 அன்று) திண்டுக்கல் – 18.55/19.00 மணி; கரூர்- 20.08/20.10 மணி; நாமக்கல் 2044/2045. சேலம் 22.05/22.15. மேற்கண்ட தகவலை சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.