செப்.28.
கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் 27.09.2025 அன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரின் பரப்புரையின் போது கூட்ட நெரிசலால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் இன்று சம்பவ இடத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் இதுவரை 40 நபர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 111 நபர்கள் காயங்களுடன் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கரூரில் ஏற்பட்ட துயர சம்பவம் குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்கள் தலைமையில், ஒரு நபர் விசாரணை ஆணையத்தினை அமைத்து உத்தரவிட்டதன் அடிப்படையில், ஆணையத்தின் தலைவர் சம்பவ இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து முதற்கட்ட விசாரணை மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது காவல்துறை உயர் அலுவலர்கள் வருவாய் துறையினர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.