கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது 2025ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவிக்கப்பட்டுள்ள இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் உள்ளிட்ட 3644 காலிப்பணியிடங்களுக்கு நேரடி தேர்வு 09:11.2025 அன்று நடைபெறவுள்ளது.
இத்தேர்வுக்கான இலவசபயிற்சி வகுப்பு. கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக 30.09.2025 அன்று முதல் நடைபெறவுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் சேரவிரும்பும் மனுதாரர்கள் 2 Passport Size புகைப்படம் மற்றும் ஆதார்அட்டை நகல் ஆகியவற்றுடன் கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வருமாறு தெரிவிக்கப்படுகிறது.
இப்பயிற்சி வகுப்புகள் சிறப்பான பயிற்றுநர்களை கொண்டு தமிழ் மற்றும் ஆங்கிலம் வழியில் நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சி வகுப்புகளில் Smart Board இலவச Wi வசதி. அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய நூலக வசதி,பொது அறிவுக்கான மாதஇதழ்கள். பயிற்சி கால அட்டவணை நாள்தோலும் சிறுநேர்வுகள் (Spot test) வாராந்திர தேர்வுகள், இணையவழித் தேர்வுகள் (online test) முழு மாதிரி தேர்வுகள், மென்பாடக்குறிப்புகள் எடுத்துக்கொள்ள இணையதளத்துடன் கூடிய கணிணி வசதி என அனைத்து வசதிகளுடன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடற்தகுதி தேர்வுக்கான இலவச பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளது.
கடந்த ஆண்டு நடத்தப்பட்ட TNPSC-Gr-2. GR-2 முதன்மை தேர்வு. Gr-4. TNUSRB, TET ஆகிய பயிற்சி வகுப்புகளில் பல்வேறு மாணவர்கள் தேர்ச்சி பெற்று அரசு பணிகளில் பணிபுரிந்து வருகின்றனர். இவ்வாய்ப்பினை கரூர் மாவட்டத்தைச் சார்ந்த இத்தேர்வுக்கு விண்ணப்பித்த மனுதாரர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 9499055912–6383050010 என்ற தொலைபேசியினை தொடர்பு கொள்ளலாம்.