ஏஆர்எஸ்.கல்வி நிலையம் கரூர் மாவட்டத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் அறிவியல் மேலாண்மை மற்றும் துணை மருத்துவ துறையில் தமிழ்நாடு அரசில் அங்கீகாரம்பெற்று 75 மாணவ மாடவியர்கள் இளங்கலை மற்றும் பட்டப் படிப்பை படித்துக்கொண்டுள்ளனர். இலவச இரத்ததான முகாம்.இலவச சிகிச்சை முகாம் மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தப்படுகிறது. அந்த வகையில் ஏஆர்எஸ். கல்வி நிலையங்கள், லோட்டஸ் கண் மருத்துவமனை இணைந்து போதை ஒழிப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு பேரணி நடைபெற்றது. டி. எஸ். பி செல்வராஜ்.தலைமையில் நகர போக்கு வரத்து காவல் ஆய்வாளர் சமீரா பானு, முன்னிலையில் மீனாட்சி பல்மருத்துவமனை மருத்துவர் பரத் கொடியசைத்து பேரணியை துவக்கிவைத்தார். மாணவ மாணவிகளுக்கு கரூர் மாவட்ட காவல்ஆய்வாளர் விஸ்வநாதன், கல்லூரியின் தலைவர் டாக்டர்.அசேன், டாக்டர் பாரத் ஆகியோர் போதையினால் ஏற்படும் தீமைகள் பற்றி விழிப்புணர்வு அளித்தனர். தோழர் களம் அமைப்பின் நிறுவனர் சண்முகம் கலந்துகொண்டார். கல்வி நிலைய முதல்வர் ரிகாஹானாபேகம் நன்றி கூறினார்.
போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
ஏஆர்எஸ்.கல்வி நிலையம் கரூர் மாவட்டத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் அறிவியல்...












