நவ. 17.
திண்டுக்கல் ரயில்வே யார்டில் புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தப் பணிகளை எளிதாக்கும் வகையில், நவம்பர் 18 & 20, 2025 அன்று சில ரயில் சேவைகள் மாற்றுப் பாதையில் இயக்கப்படும். பின்வரும் ரயில் சேவைகள் மாற்றுப் பாதையில் இயக்கப்படும்.:-
1. நாகர்கோவில் சந்திப்பிலிருந்து காலை 8 மணிக்குப் புறப்பட திட்டமிடப்பட்டுள்ள ரயில் எண் 16321 நாகர்கோவில்- கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ், விருதுநகர்- கரூர் இடையே, மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சிராப்பள்ளி வழியாக நவம்பர் 18 & 20 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் திருப்பரங்குன்றம், மதுரை , சோழவந்தான், கொடைக்கானல் சாலை, அம்பத்துரை, திண்டுக்கல், எரியோடு மற்றும் பாளையம் ரயில் நிலையங்ளில் நிற்காது . இருப்பினும், மாற்றுப்பாதையில் அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் ரயில் நிறுத்தம் உண்டு.
ரயில் எண்.16322 கோவையில் இருந்து கரூர்- விருதுநகர் இடையே திருச்சிராப்பள்ளி, காரைக்குடி, மானாமதுரை வழியாக நவம்பர் 18 & 20, 2025 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். இதன் விளைவாக, இந்த ரயில் பாளையம், எரியோடு, திண்டுக்கல், அம்பாத்துரை, கொடைக்கானல் சாலை, சோழவந்தான், திருமங்கலம், மதுரை ஆகிய ரயில் நிலையங்களுக்கு செல்லாது. இருப்பினும், மாற்றுப்பாதையில் திருச்சிராப்பள்ளி., புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை மானாமதுரை, அருப்புக்கோட்டை ஆகிய இடங்களில் நின்று செல்லும்.
3. நாகர்கோவிலில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்படும் ரயில் எண். 16340 நாகர்கோவில்- மும்பை சிஎஸ்எம்டி எக்ஸ்பிரஸ், விருதுநகர்- கரூர் இடையே 18.11.2025 அன்று மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சிராப்பள்ளி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். மாற்றுப்பாதையில் அருப்புக்கோட்டை, மானாமதுரை சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் ரயில் நிறுத்தப்படும்.
ரயில் எண் 16734 ஓகா (குஜராத்தில்) – ராமேஸ்வரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் 20.11.2025, 20.11.2025 அன்று ஜோலார்பேட்டை, சேலம், ராசிபுரம், நாமக்கல் கரூர் வழியாக செல்லும். இதனால், அன்றைய தினம் திண்டுக்கல் மற்றும் மதுரை செல்லாது. திருச்சிராப்பள்ளி சந்திப்பு, புதுக்கோட்டை, காரைக்குடி மற்றும் சிவகங்கை ஆகிய இடங்களில் ரயிலுக்கு மாற்று நிறுத்தங்கள் வழங்கப்படும்.
இத்தகவலை சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.











