ஆக.27.
தமிழ் நாடு வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடுதாரர்களுக்கு ஓர் நற்செய்தி
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் திருச்சி வீட்டு வசதி பிரிவிற்குட்பட்ட அனைத்து திட்டப்பகுதிகளில் உள்ள மனைகள் வீடுகள் அடுக்குமாடி குடியிருப்புகளில் (சுயநிதித் திட்டம் மற்றும் வணிக மனைகள் நீங்கலாக) ஒதுக்கீடு பெற்று 31.03.2015ற்கு முன்பு தவணைக் காலம் முடிவற்ற ஒதுக்கீடுதாரர்களுக்கு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசாணையின்படி வட்டி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சலுகையினை பெற ஒதுக்கீடுதாரர்களால் 31.03.2026 க்குள் நிலுவைத் தொகையினை ஒரே தவணையாக செலுத்தப்பட வேண்டும்.
மாத தவணை அபராத வட்டி முழுமையாக தள்ளுபடி.
வட்டி முதலாக்கத்தின் மீதான வட்டி முழுமையாக தள்ளுபடி.
நிலத்திற்கான இறுதி விலை வித்தியாசத் தொகையில் ஒவ்வொரு ஆண்டும் 5 மாத வட்டித் தள்ளுபடி
கடந்த 31.03.2015 ற்கு முன்னர் தவணைபடி ஒதுக்கீடுதாரர்கள் நிலுவைத் தொகையினை அறிந்து ஒரே தவணையில் தொகையினை செலுத்தி மேற்கண்ட வட்டிச் சலுகையை பயன்படுத்தி கிரயப் பத்திரம் பெற்று கொள்ளலாம் என கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.