அக். 5.
கரூர் – வீரராக்கியம் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரயில் பாலத்தில் பொறியியல் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தப் பணிகளை எளிதாக்க, கீழே குறிப்பிடப்பட்டுள்ளபடி இரண்டு ரயில் சேவைகள் குறுகிய கால நிறுத்தப்படும்.
பாலக்காடு நகரத்திலிருந்து காலை 06.30 மணிக்குப் புறப்பட திட்டமிடப்பட்டுள்ள ரயில் எண் 16844 பாலக்காடு நகரம் – திருச்சிராப்பள்ளி எக்ஸ்பிரஸ், 06.10.2025 அன்று கரூர் சந்திப்பு ரயில் நிலையத்தில் குறுகிய கால நிறுத்தப்படும். இந்த ரயில் பாலக்காடு நகரத்திலிருந்து கரூர் சந்திப்புக்கு மட்டுமே இயக்கப்படும்; அன்று கரூர் சந்திப்பு முதல் திருச்சிராப்பள்ளி சந்திப்பு வரை இயக்கப்படாது.
ரயில் எண்.16843
திருச்சிராப்பள்ளி சந்திப்பிலிருந்து மதியம் 13.00 மணிக்கு புறப்பட திட்டமிடப்பட்டுள்ள திருச்சிராப்பள்ளி – பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ், 06.10.2025 அன்று மாயனூரில் (கரூர் அருகே) ரயில் நிலையத்தில் குறுகிய நிறுத்தப்படும். இருப்பினும், பணிகள் முடிந்த பிறகு, மாயனூரில் இருந்து பாலக்காடு டவுனுக்கு ஒரு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில், ரயில் எண்.16843 திருச்சிராப்பள்ளி – பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸின் அதே நிறுத்தங்களுடன் இயக்கப்படும். இத்தகவலை சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது ன.