செப். 24.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் Combined Technical Services Examination ( ITI Level) – II -ல் அடங்கிய 1794 பணிக்காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான தேர்வு 16.11.2025 அன்று ( Paper-| முற்பகல் மற்றும் Paper-Il பிற்பகல்) நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் பத்தாம் வகுப்பு மேல்நிலைக்கல்வி / தேசிய தொழிற்பயிற்சி / தேசிய பழகுநர் பயிற்சி படித்து முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இத்தேர்விற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி தேதி 02.10.2025 ஆகும். இத்தேர்விற்கான இலவச இணையவழி பயிற்சி வகுப்பு கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக அக்டோபர் 2வது வாரத்தில் நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்புகள் சிறப்பான பயிற்றுநர்களை கொண்டு தமிழ் மற்றும் ஆங்கிலம் வழியில் நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சி வகுப்பில் பயிற்சி கால அட்டவணை. நாள்தோறும் சிறுதேர்வுகள் (Spot test) வாராந்திரத்தேர்வுகள், இணையவழித்தேர்வுகள் (online test). முழு மாதிரி தேர்வுகள் நடைபெறும். கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட TNPSC-Gr-1. TNPSC-Gr-2. Gr-4. TNUSRB TRB ஆகிய பயிற்சி வகுப்புகளில் அதிகபடியான மாணவர்கள் தேர்ச்சி பெற்று பல்வேறு அரசுத்துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.
இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து முன்பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 94890-39848, 6383050010 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாய்ப்பினை கரூர் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.