ஆக.22.
இந்திய மருத்துவ சங்கம் கரூர் கிளை கூட்டம் இன்று சங்க அரங்கில் நடைபெற்றது. கரூர் மாவட்ட தலைவர் சண்முகநாதன், செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் செந்தில் முத்து, துணை செயலாளர் சதாசிவம் உள்ளிட்டோர் பேசினர்.
கரூரில் உள்ள தனியார் ஸ்கேன் சென்டரில், 16-08-2025 பணியில் இருந்த மருத்துவரை அவர் நோயாளியை பரிசோதித்துக் கொண்டிருந்த போது மற்றொரு நோயாளியுடன் வந்த நபர்கள் மருத்துவரின் அறைக்குள் அத்துமீறி நுழைந்து, அவரை தாக்கினர். இந்த சம்பவத்தை கடுமையாக கண்டித்து இன்று (21-08-2025 வியாழன்) புற நோயாளிகள் சேவை புறக்கணிக்கப்படுகிறது.
மருத்துவர்கள் மீது நடைபெறும் இத்தகைய தாக்குதல்கள் மருத்துவ பாதுகாப்பு சட்டத்திற்கு எதிரானது. மற்றும் மருத்துவ சமூகத்தின் பாதுகாப்பிற்கும் பொதுமக்களின் நலத்திற்கும் அச்சுறுத்தல் ஆகும். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மருத்துவ துறை சார்ந்த நபர்கள் மற்றும் நிறுவனங்கள் வன்முறை தடுப்பு மற்றும் உடைமை சேதார தடுப்புச் சட்டத்தின் கீழ் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துகிறோம் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.