அக். 2.
மதுரை கோட்டத்தில் உள்ள சோழவந்தான்- மதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளப் புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பொறியியல் பணிகளை எளிதாக்கும் வகையில், கீழே குறிப்பிடப்பட்டுள்ளபடி ஒரு ஜோடி ரயில் சேவைகள் பகுதியளவு ரத்து செய்யப்படும்.
ஈரோட்டில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட திட்டமிடப்பட்ட ரயில் எண் 16845 ஈரோடு சந்திப்பு- செங்கோட்டை எக்ஸ்பிரஸ், 02.10.2025 முதல் 30.10.2025 வரை திண்டுக்கல்- செங்கோட்டை இடையே பகுதியளவு ரத்து செய்யப்படும், 07, 14, 18, 19, 20, 21 & 28 அக்டோபர், 2025 தவிர. இந்த ரயில் ஈரோட்டிலிருந்து திண்டுக்கல்லுக்கு மட்டுமே இயக்கப்படும்; மேற்கூறிய தேதிகளில் திண்டுக்கல்லில் இருந்து செங்கோட்டைக்கு இயக்கப்படாது
செங்கோட்டையில் இருந்து காலை 05.10 மணிக்குப் புறப்பட வேண்டிய ரயில் எண் 16846 செங்கோட்டை- ஈரோடு எக்ஸ்பிரஸ், 08.15, 19, 20, 21, 22 & 29 அக்டோபர், 2025 தவிர, 03.10.2025 முதல் 31.10.2025 வரை செங்கோட்டை திண்டுக்கல் இடையே பகுதியளவு ரத்து செய்யப்படும். இந்த ரயில் செங்கோட்டையிலிருந்து திண்டுக்கல்லுக்கு இயக்கப்படாது, மேற்கூறிய தேதிகளில் திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு ஈரோடு வரை இயக்கப்படும்.
இத்தகவலை சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.