நவ.15.
கரூர் பரணி பார்க் கல்விக் குழுமத்தில் “நிறுவன அறங்காவலர் சாமியப்பர் நினைவு அறிவியல் திருவிழா” நடைபெற்றது. இருநாள் விழாவில் ரோபோடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, அறிவியல் தத்துவங்களை எளிய முறையில் விளக்கும் ஆய்வுகள் உள்ளிட்ட 342 அறிவியல் படைப்புகள் மற்றும் ஆய்வுகள் 2000 இளம் அறிவியல் விஞ்ஞானிகளால் காட்சிப்படுத்தப்பட்டன. பரணி குழந்தை விஞ்ஞானிகளின் மெச்சத் தகுந்த அறிவியல் ஆர்வமும், ஆங்கில அறிவும் பார்வையாளர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது.
இவ்விழாவிற்கு பரணி பார்க் கல்விக் குழுமத் தாளாளர் மோகனரங்கன் தலைமை தாங்கினார். செயலர் பத்மாவதி மோகனரங்கன், அறங்காவலர் சுபாஷினி அசோக் சங்கர் முன்னிலை வகித்தனர். கரூர் மாவட்டக் கல்வி அலுவலர் – தனியார் பள்ளிகள்.செல்வமணி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு அறிவியல் திருவிழா, ஓவியக்கண்காட்சியினை துவக்கி வைத்தார். பரணி பார்க் கல்வி குழும முதன்மை முதல்வர் முனைவர் சொ.ராமசுப்ரமணியன், கூறுகையில் “இரண்டு நாட்கள் நடைபெற்ற அறிவியல் திருவிழாவில் ரோபோடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, அறிவியல் தத்துவங்களை எளிய முறையில் விளக்கும் ஆய்வுகள், பூமி மற்றும் விண்வெளி அறிவியல், மருத்துவ, வானியல், அறிவியல் கண்டுபிடிப்புகள், ஊட்டச்சத்து வகைகள், வானம் மற்றும் விண்வெளியின் அதிசயங்கள், மருத்துவ மூலிகைகள் போன்ற பல்வேறு தலைப்புகளில் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இக்கண்காட்சியில் தொடக்கநிலை வகுப்புகளில் பயிலும் சுமார் 2000 இளம் விஞ்ஞானிகளால் 342 அறிவியல் மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டன.
இளம் மாணவர்களிடையே குழு உணர்வு, தலைமைப் பண்பு, அறிவியல் மனப்பான்மை, அச்சமின்றி சரளமாக ஆங்கிலத்தில் பேசும் திறன் ஆகியவற்றை வளர்க்கும் வகையில் டைபெற்றது என்று கூறினார். மேலும் மாணவர்களுக்கு நமது பாரம்பரிய மூலிகைச் செடிகள் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் பொருட்டு பள்ளி வளாகத்தில் 50 வகையான மூலிகைச் செடிகளுடன் நம்மாழ்வார் மூலிகைத்தோட்டமும் செயல்பட்டு வருகிறது என்றார்.
குழந்தைகள் அறிவியல் திருவிழாவில் வியப்பூட்டும் அறிவியல் அரங்குகள், பாரம்பரிய உணவுக் கொண்டாட்டம், 2000 ஆண்டு பழமையான தமிழியில் பெயர் எழுதும் அரங்கு, வந்தே மாதரம் 150-ம் ஆண்டு கொண்டாட்டம், ஜப்பான் பண்பாட்டு அரங்கம், மாணவர் ஓவியம் மற்றும் கலைப்பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. அனைத்து ஏற்பாடுகளும் பரணி பார்க் கல்விக் குழும முதன்மை முதல்வர் முனைவர் சொ.ராமசுப்ரமணியன் தலைமையில் பரணி வித்யாலயா முதல்வர் சு.சுதாதேவி, பரணி பார்க் முதல்வர் க.சேகர், துணை முதல்வர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.












