கரூர் வேலுச்சாமி புரத்தில் நடிகர் விஜய்யின் பரப்புரை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. விஜய் பேசிய சிறிது நேரத்தில் கூட்டத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டது . கீழே விழுந்தவர்களை மிதித்து விட்டு அங்கும் இங்கும் ஓட ஆரம்பித்தனர். அப்போது ஆம்புலன்ஸ் வந்தது. நெரிசல் காரணமாக ஆம்புலன்ஸ் நகர முடியவில்லை. விஜய் பேச்சை நேரடி ஒளிபரப்பு செய்வதற்காக இரும்பு தட்டிகளால் பெரிய அறை ஏற்படுத்தப்பட்டது. அந்த தட்டியை உடைத்து விட்டு உள்ளே புகுந்தனர். அப்பொழுது ஒருவர் மீது விழுந்து மயக்கம் அடைந்தனர். நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 16 பேர் பெண்கள். 6பேர் குழந்தைகள். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மயக்கம் அடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அறிந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல், திருச்சி போலீஸ் ஐஜி ஜோஷி நிர்மல் குமார், எஸ்.பி.ஜோஸ் தங்கையா மற்றும் போலீஸ் உயரதிகாரிகள், மருத்துவ அதிகாரிகள் விரைந்தனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்காக அனைத்து மருத்துவர்களும் பணிக்கு வந்துள்ளனர் . மருந்து மாத்திரைகள் உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும் கூடுதலாக திண்டுக்கல் நாமக்கல் மாவட்டங்களில் இருந்து அரசு மருத்துவர்கள் வந்து கொண்டுள்ளனர். தனியார் மருத்துவமனையில் சென்று அனுமதிக்கப்பட்டவர்களைப் பார்த்து உடல் நலம் குறித்து விசாரித்தோம். யாரிடம் பணம் வாங்க வேண்டாம் அரசு பார்த்துக் கொள்ளும் என கூறப்பட்டிருக்கிறது.
அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் அன்பில் மகேஷ், வந்து கொண்டுள்ளனர். நாளை தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் கரூர் வருகை தர உள்ளதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
நாளை அதிகாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரூர் வருகிறார். 45க்கும் மேற்பட்டவர்கள் மயக்கமுற்று சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிர் இழப்பு மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
கரூர் விஜயின் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 29 பேர் உயிரிழப்பு, 45க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற உள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!