செப். 20.
தமிழ்நாடுஅரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை தொழிற்பிற்சி நிலையங்களில் (ITI) சேர்க்கை அறிவிப்பு.
கரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேடியாக பெறப்பட்டு வருகிறது. தற்பொழுது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 30.09.2025 அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் கீழ்க்கண்ட தொழிற் பயிற்சி. Mechanic Auto Body Repair 10-ம்வகுப்பு தேர்ச்சி பயிற்சி காலம்-1 ஆண்டு (ஆண்/பெண் இருபாலரும்). அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை, புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ 1000/,’ தமிழ்புதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு ரூ 1000/- இலவச பேருந்து கட்டண சலுகை, மிதிவண்டி, வரைபடக்கருவிகள், பாடப்புத்தகங்கள், சீருடைகள், காலணிகள் அரசால் வழங்கப்படும்.
மேலும் பயிற்சி முடித்தவுடன் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களின் சேர்க்கை தொடர்பான கூடுதல் விபரங்களை கரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை தொலைபேசி (04324-222111, 9499055711. 9499055712) வாயிலாக அல்லது நேரில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளுமாறு கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.