ஆக.19.
கரூர் மாநகராட்சி வார்டு எண் 8.9 மற்றும் மண்மங்கலம் வட்டம் ஆகிய பகுதிகளுக்கு இன்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் நடைபெற்றது. 20 பயனாளிகளுக்கு ரூ. 9.90 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது-
முதலமைச்சர் அவர்கள் உங்களுடன் ஸ்டாலின் எனும் சிறப்பான திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்கள். இத்திட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் 10000 முகாம்களும் கரூர் மாவட்டத்தில் 179 முகாம்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 60 முகங்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில் 49333 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருத்து வரப்பெற்றுள்ளன. இம்மனுக்களில் 18.074 மனுக்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கோரிக்கை மனுக்களாகும். பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு அன்றைய தினமே தீர்வு காணப்படுகிறது. சில மனுக்களுக்கு ஒருவார காலம் எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரிக்கப்பட்டு தீர்வு வழங்கப்படுகிறது. அதிகபட்சம் 45 நாட்களுக்குள் உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
முதலமைச்சர் அவர்கள், தண்ணீர்பந்தல் பாளையம் முதல் வீரராக்கியம் வரை ரூ. 700 கோடி மதிப்பீட்டில் புதிய சுற்றுவட்டச் சாலை அமைப்பதற்கான நிதிகளையும் அரசாணைகளையும் வழங்கியுள்ளார்கள். இதில் முதற்கட்டமாக நிலமெடுப்பதற்காக ரூ.72 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மண்மங்கலம் ஊராட்சியில் வட்டாட்சியர் அலுவலகம், புத்திரப்பதிவு அலுவலகம். மருத்துவமனை விரிவாக்க கட்டிடம் என வளர்ச்சித் திட்டங்களை வழங்கியிருக்கிறார்கள்.
5 ஆண்டுகள் தொடங்கி 40 ஆண்டுகள் வரை குடியிருந்தும் பட்டா இல்லாமல் வாழும் பொதுமக்களுக்கு 28,000 பட்டாக்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை கரூர் மாவட்டத்தில் 45000 பயனளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
மாநகராட்சி மேயர் வெ கவிதா, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாநகராட்சி ஆணையர் .சுதா, துணை மேயர் ப.சரவணன், மண்டலகுழு தலைவர்கள் கனகராஜ், ராஜா, சக்திவேல் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.