ஜூலை.25.
கரூர் மாவட்டம் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் மாண்புமிகு முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றியத்திற்கு கால்நடை வளர்க்கும் 100 கிராமப்புற ஏழை விவசாயிகளை அடையாளம் காணப்பட்டு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக 50 சதவீத மானியத்தில் கருவுற்ற பசுக்களுக்கு தீவனம் மற்றும் கனிமகலவை வழங்கப்படும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் ஒரு கருவுற்ற பசுவுக்கு ஒரு நாளைக்கு 3கிலோ சமச்சீரான தீவனம் வீதம் 4மாதங்களுக்கு மொத்தம் 300 கிலோ வழங்கப்படும். மேலும் ஒரு கருவற்ற பசுவிற்கு மாதத்திற்கு ஒரு கிலோ தாது உப்புகலவை மற்றும் விட்டமின் சப்ளிமெண்ட்ஸ் காலத்திற்கு மொத்தம் 4 கிலோ வழக்கப்படும்.
இத்திட்டத்தில் பயனாளிகள் கவன ஈர்ப்பு வட்டாரத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவர். கருவுற்ற பசுவை சொந்தமாக வைத்திருக்க வேண்டும். மாவட்டத்தின் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இருந்து பால் விநியோகம் செய்பவராக இருக்க வேண்டும். பெண்கள் விதவை ஆதரவற்றோர், மாற்றுதிறனாளிகள் SCST உற்பத்தியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தேர்ந்தெடுக்கும் பயனாளிகளில் 20% SCSI சமூகத்தை சேர்ந்தவராக இருப்பர்.
மேற்காணும் திட்டத்தில் பயன் பெற விரும்புபவர்கள் மேற்காணும் தகுதிகளை பெற்றிருப்பின் தங்கள் பகுதியில் உள்ள அரசு கால்நடை மருந்தகம் அல்லது சம்பந்தப்பட்ட பால் உற்பத்தியாளர் சங்கம் மூலம் விண்ணபிக்குமாறு கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.