https://www.facebook.com/share/v/16caWEA2Ap
தேர்தல் பணிகளை மேற்கொள்வது மாநாடுகள் பொதுக்கூட்டங்கள் நடத்துவது, கூட்டங்களை நடத்துவது, வருகை பதிவேடு முறையை நடைமுறைப்படுத்துவது இதில் எல்லாம் செந்தில் பாலாஜி தனக்கென தனிப்பாணி அமைத்துக் கொண்டு செயல்பட்டு வருபவர். வெளியில் சொல்லாவிட்டாலும், அவரை பின்பற்றியே பலர் கூட்டங்களைக் கூட்டுவது தேர்தல் பணிகளை மேற்கொள்வது போன்றவை செய்து கொண்டுள்ளனர். இவைகளுக்கெல்லாம் எக்ஸ்பர்ட் மட்டுமின்றி பலருக்கு ரோல் மாடலும் செந்தில் பாலாஜி தான். செந்தில் பாலாஜி வெளியே இல்லாதநிலையிலும் இளைஞர் அணி செயலாளர் கூட்டத்தை மாநாடு போல் கரூரில் நடத்திக் காட்டி இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினிடம் பெயர் வாங்கினார். பின்னர் கரூர் நாடாளுமன்ற தொகுதி பரப்புரை கூட்டத்தை கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் நடத்தி கடல் போல் கூட்டத்தை கூட்டினார்.
முதன்முதலில் ரேம்ப் அறிமுகம் செய்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை நடந்துவர செய்து பிரசாரம் நடத்தினார். பல அரசியல் தலைவர்களும் தற்போது ரேம்ப் அமைத்து நடந்து வருவதைப் பார்க்கலாம். கரூரில் கோடங்கிபட்டியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் நுழைவு ஆர்ச் முதல் மேடை வரை வருவதற்கு நுழைவு வாயில் முதல் மேடை வரை தார் சாலை அமைத்து, இருபுறமும் தடுப்பு ஏற்படுத்தி அனைவரும் பார்க்கும் வகையில் புதிய ஃபார்முலாவை கொண்டுவந்தார் செந்தில் பாலாஜி. இனி நடைபெறும் அரசியல் கட்சி கூட்டங்களிலும் இதே முறையை பின்பற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு லட்சம் இருக்கைகள் போடப்பட்டு ஸ்நாக்ஸ் கொண்ட பை குடிநீர் ஆகியவை வைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு வேலைக்கும் ஆட்கள் நியமித்து நேர்த்தியாக விழா நடைபெற்றது. மைதானத்திற்கு நுழைய முடியாமல் நீண்ட தூரம் வாகனங்களில் பல லட்சம் பேர் காத்திருந்தது குறிப்பிடத்தக்கது. கொட்டும் மழையிலும் நின்று கேட்கும் அளவிற்கு முதலமைச்சரின் உரை அமைந்திருந்தது.