ஜன.31.
ஜவுளித் தொழில் முனைவோர்களுக்கு தொழில்நுட்ப ஜவுளித் துறையில் குறுகிய காலப் பயிற்சி அளிக்கப்படுகிறது. (Short Term Training on Technical Textiles).
இந்திய பொருளாதாரத்தில் ஜவுளித்தொழில் ஒரு தனித்துவமான இடத்தை பிடித்துள்ளது.நாட்டின் மொத்த ஜவுளி உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு மிக முக்கியமானதாகும். தமிழ்நாட்டு ஜவுளித்தொழில் முனைவோர்களுக்கு தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கம் (NTTM) மூலமாக தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சிக் கழகம் (SITRA) கோயம்புத்தூரில் தொழில்நுட்ப ஜவுளிகள் தொடர்பான Agrotextiles. Geotextiles Mobiletextiles. Medical Textiles etc. ஆகிய பிரிவுகளில் குறுகிய காலப் பயிற்சி நான்கு நாட்களுக்கு அளிக்கப்படவுள்ளது. பயிற்சிக்கான கட்டணத்தை மத்திய மாநில அரசுகளே வழங்குகின்றன. எனவே தொழில் முனைவோர்கள் முதன்மை செயல் அலுவலர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள் என கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
மேற்படி பயிற்சியினை பெற விரும்புபவர்கள் வலை தளத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் இப்பயிற்சி தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மண்டல துணை இயக்குநர் துணிநூல் துறை அலுவலகத்தை அணுகுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார். அணுக வேண்டிய முகவரி -மண்டல துணை இயக்குநர் அலுவலகம். துணி நூல் துறை. நாலடியார் வளாகம். முதல் தளம். தான்தோன்றி மலை- கரூர் 639005.மின்னஞ்சல்
rddtextileskarur@ gmail.com
04324-299544 94446 56445.