அக்.9.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகளிலும் 2024-2025 ஆம் கல்லி Home Based Elderly Care Support Assistant என்ற 3 மாத கால சான்றிதழ் படிப்பு தொடங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இச்சான்றிதழ் படிப்பிற்கு கரூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு 25 இடங்கள் சேர்க்கைக்கு அரசால் அனுமதிக்கபட்டுள்ளது. மேற்படி மூன்று மாத கால சான்றிதழ் படிப்பில் சேர பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்த பட்சம் 17 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சமாக 32 வயது நிரம்பாதவராகவும், பட்டியல் வகுப்பினருக்கு (SC/ SCA/ST) 37 வயது நிரம்பாதவராகவும் இருக்க வேண்டும். கரூர் மாவட்டத்தினை சேர்ந்தவராக இருக்க வேண்டும். இச்சான்றிதழ் படிப்பில் சேர விருப்பம் உள்ளவர்கள் 15.10.2024 மாலை 5.00 மணிக்குள் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வருக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.