ஆக.26.
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்க்ஸில் டிக்ளர் செய்த பின்னும் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளது.
ஒரே மைதானத்தில் விளையாடிய அடுத்தடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் முதல் இன்னிங்க்ஸில் 400 ரன்களுக்கும் மேல் எடுத்த பின்னரும், அந்த போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது. முதல் இன்னிங்க்ஸில் 448 ரன்கள் எடுத்தவுடன் பாகிஸ்தான் அணி டிக்ளர் செய்தது. வங்கதேச அணி முதல் இன்னிங்க்ஸில் 565 ரன்கள் குவித்து அதிர்ச்சி அளித்தது. ஐந்தாம் நாள் மட்டுமே மீதமிருந்த நிலையில் போட்டி டிரா ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இரண்டாம் இன்னிங்க்ஸில் பாகிஸ்தான் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது . 30 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் வங்கதேச அணி விக்கெட் இழக்காமல் அந்த சிறிய இலக்கை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கடந்த மூன்று ஆண்டுகளில் பாகிஸ்தான் அணி தங்களின் சொந்த மண்ணில் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் ஒரு வெற்றி கூட பெறவில்லை.
.