நவ.15.
உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி, நியூஸிலாந்து அணியுடன் விளையாடியது. துவக்க ஆட்டக்காரர்களாக ரோகித் – ஷுப்மன் கில் களமிறங்கினர். அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 9வது ஓவரில் டிம் சவுதியின் பந்துவீச்சில் 47 ரன்களுக்கு ரோகித் அவுட் ஆனதும் விராட் கோலி களம் இறங்கினார்.
கில் வெளியேறிய பிறகு விராட் கோலி பொறுப்புடன் விளையாடி அரைசதம் கடந்தார். 60 பந்துகளை சந்தித்த கோலி, 4 பவுண்டரிகளுடன் அரைசதம் அடித்தார். 29வது ஓவரில் இந்திய அணி 200 ரன்களை கடந்தது. தொடர்ந்து கோலியுடன் ஸ்ரேயஸ் ஜோடி சேர்ந்தார். ஸ்ரேயஸ் நடப்பு உலகக் கோப்பை தொடரில் நான்காவது அரைசதம் பதிவு செய்தார்.
அதேநேரம், சதத்தை நோக்கி முன்னேறிய விராட் கோலி எதிர்பார்த்தபடி, பழைய சாதனையையும் முறியடித்தார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் டெண்டுல்கர் 49 சதம் அடித்தது சாதனை என இருந்தது. 50வது சதம் அடித்து விராட் கோலி. அதனை முறியடித்தார். டெண்டுல்கர் முன்னிலையில் இந்த சாதனையை படைத்தார். 106 பந்துகளை சந்தித்த கோலி, 8 பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடித்து சதத்தை பூர்த்தி செய்தார். இதன்பின் 117 ரன்களில் டிம் சவுதியின் பந்துவீச்சில் கேட்ச்சில் ஆட்டம் இழந்தார்.