• கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
Monday, May 12, 2025
Karurxpress
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
No Result
View All Result
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
No Result
View All Result
Karurxpress
No Result
View All Result
Home விளையாட்டு

உலகக்கோப்பை கிரிக்கெட்: சுருண்டு விழுந்தவர் விஸ்வரூபம் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தார்

karurxpress by karurxpress
November 8, 2023
in விளையாட்டு
0
உலகக்கோப்பை கிரிக்கெட்: சுருண்டு விழுந்தவர் விஸ்வரூபம் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தார்
133
VIEWS

நவ.8.

உலகக் கோப்பை கிரிக்கெட் திருப்பங்கள் நிறைந்ததாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகிறது. ஐந்து முறை சாம்பியன் ஆன ஆஸ்திரேலிய அணி சரிவை நோக்கி சென்ற போது மேக்ஸ்வெல் அபாரமாக ஆடி தனது அணியை வெற்றி பெற வைத்தார்.

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடைபெற்ற 39-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, ஆப்கானிஸ்தானுடன் விளையாடியது. ஒரு கட்டத்தில் தோல்வியின் விளிம்புக்குப் போய் தத்தளித்தது ஆஸ்திரேலியா அணி. அந்த அணி வீரர் மேக்ஸ்வெல் விஸ்வரூபம் எடுத்து இரட்டை சதம் அடித்தார் . இதனால் அரை இறுதிக்கு ஆஸ்திரேலியா முன்னேறியது. ஒரு கட்டத்தில் அபாரமாக ஆடி நூறு ரன்களை கடந்து அணியை வெற்றி பாதைக்கு மேக்ஸ்வெல் அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் காலில் தசைப் பிடிப்பு ஏற்பட்டது. திடீரென சுருண்டு விழுந்தார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சரியாகும் வரை அடுத்த வீரரான ஜம்பாவை இவருக்கு மாற்றாக களம் இறக்க அணி ஆலோசனை நடத்தியது. நானே விளையாடுகிறேன் என நம்பிக்கையோடு மேக்ஸ்வெல் மீண்டும் களம் புகுந்தார். அணியை எப்படியாவது வெற்றி பெற வைக்க வேண்டும் என விஸ்வரூபம் எடுத்தார். இரட்டை சதம் அடித்து அணியை வெற்றி பெற செய்த மேக்ஸ் வில்லுக்கு வயது 35. இது மட்டுமல்ல முந்தைய சாதனைகள் பலவற்றை அடித்து நொறுக்கி முதல் இடத்திற்கு வந்துள்ளார். அவைகள்-

இலக்கை நோக்கி ஆடிய 2-வது பேட்டிங்கில் ஒரு வீரரின் அதிகபட்ச ரன் இது. இதற்கு முன்பு பாகிஸ்தானின் பஹர் ஜமான், 2021-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 193 ரன்கள் எடுத்ததே சேசிங்கில் ஒரு வீரரின் அதிகபட்சமாக இருந்தது.

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் கிறிஸ் கெய்ல், மார்ட்டின் கப்தில் ஆகியோருக்கு பிறகு இரட்டை சதம் அடித்த 3-வது வீரர் மேக்ஸ்வெல் ஆவார்.

52 ஆண்டுகால ஒரு நாள் போட்டி வரலாற்றில் இதுவரை 11 இரட்டை சதங்கள் பதிவாகியுள்ளன. இதில் மேக்ஸ்வெல் தவிர மற்ற அனைவரும் தொடக்க வீரராக இறங்கி இரட்டை சதம் அடித்தவர்கள் ஆவர். மேக்ஸ்வெல் மட்டுமே 6-வது வரிசையில் நுழைந்து ருத்ரதாண்டவமாடியிருக்கிறார்.

மேக்ஸ்வெல் 128 பந்துகளில் இரட்டை சதத்தை அடைந்தார். ஒரு நாள் போட்டியில் இது 2-வது அதிவேக இரட்டை சதமாகும். இந்தியாவின் இஷான் கிஷன் கடந்த ஆண்டு வங்காளதேசத்துக்கு எதிராக 126 பந்துகளில் 200-ஐ தொட்டதே மின்னல்வேக இரட்டை சதமாக நீடிக்கிறது.

21 பவுண்டரி, 10 சிக்சருடன் 201 ரன்கள் குவித்த மேக்ஸ்வெல் ஆஸ்திரேலிய வீரர்களில் முதல் இரட்டை சத நாயகன் என்ற அரிய சாதனையை வசப்படுத்தினார். இதற்கு முன்பு ஆஸ்திரேலிய தரப்பில் ஷேன் வாட்சன் 185 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாகும்.

உலகக் கோப்பை போட்டிகளில் அதிக சிக்சர் அடித்தவர்களின் பட்டியலில் வெஸ்ட் இண்டீசின் கிறிஸ்கெய்ல் (49 சிக்சர்), இந்தியாவின் ரோகித் சர்மா (45) ஆகியோருக்கு அடுத்த இடத்துக்கு மேக்ஸ்வெல் (43 சிக்சர்) முன்னேறியுள்ளார்.

Related Posts

காயங்கள் ஆறியதும் கலாட்டாவை ஸ்டார்ட் பண்ணலாம்- டோனி

காயங்கள் ஆறியதும் கலாட்டாவை ஸ்டார்ட் பண்ணலாம்- டோனி

by karurxpress
May 8, 2025
0

https://twitter.com/ChennaiIPL/status/1920182580927979732?t=mitlcvAvTA1hbx85xwHC3A&s=19 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 57வது லீக் போட்டியில் கேகேஆர் அணியை எதிர்த்து...

நல்ல கிரிக்கெட்டை விளையாடினோம்: அடுத்து சந்திக்கலாம்- டோனி கூல் பேட்டி

நல்ல கிரிக்கெட்டை விளையாடினோம்: அடுத்து சந்திக்கலாம்- டோனி கூல் பேட்டி

by karurxpress
April 21, 2025
0

https://twitter.com/ChennaiIPL/status/1913988100151496917?t=B6d-xckYAS9Sgh8cT1-59g&s=19 மும்பை அணியுடன் நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே அணி மோச மான தோல்வி...

சிஎஸ்கே அணி பிளே- ஆப் செல்வதில் சிக்கல்

சிஎஸ்கே அணி பிளே- ஆப் செல்வதில் சிக்கல்

by karurxpress
April 9, 2025
0

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில்...

சிஎஸ்கே. வெற்றிக்கு இவர்தான் காரணம்

சிஎஸ்கே. வெற்றிக்கு இவர்தான் காரணம்

by karurxpress
March 24, 2025
0

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆப்கானிஸ்தான் வீரர் நூர்அகமதுவை மெகா ஏலத்தில் 10...

Load More
  • Trending
  • Comments
  • Latest
கரூரில் குளிக்க சென்றபோது பரிதாபம்: கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

கரூரில் குளிக்க சென்றபோது பரிதாபம்: கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

May 14, 2024
கரூர் மாவட்டம் 10மணி நேரத்தில் 193 மி.மீ. மழை: பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

கரூர் மாவட்டம் 10மணி நேரத்தில் 193 மி.மீ. மழை: பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

May 20, 2024
வீடு புகுந்து நகை கொள்ளை: எதிரிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்: எஸ்.பி பாராட்டு

வீடு புகுந்து நகை கொள்ளை: எதிரிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்: எஸ்.பி பாராட்டு

November 19, 2024
ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன பேரணி

ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன பேரணி

April 26, 2025

கரூர் மாவட்ட திமுக முன்னோடிகள் 270பேருக்கு பொற்கிழி முப்பெரும் விழாவில் செந்தில்பாலாஜி வழங்கினார்

0

ரூ 750 கோடியில் காவிரியில் தடுப்பணை குளித்தலை அருகே அமைச்சர் ஆய்வு

0

கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் கரூர் மாவட்டம் இரண்டாம் இடம்

0

இல்லாத நிறுவனத்தின் ஆய்வறிக்கை பெற்று இயங்கிய கல்குவாரிகளால் பல கோடி அரசுக்கு இழப்பு ஆலோசனை கூட்டத்தில் அதிர்ச்சி தகவல்

0
கரூர் மாரியம்மன் திருவிழா தொடங்கியது

கரூர் மாரியம்மன் திருவிழா தொடங்கியது

May 12, 2025
கரூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை

கரூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை

May 10, 2025

போலி ஆதார், பான் கார்டுகள் தயாரித்தவர்கள் கைது

May 10, 2025
காயங்கள் ஆறியதும் கலாட்டாவை ஸ்டார்ட் பண்ணலாம்- டோனி

காயங்கள் ஆறியதும் கலாட்டாவை ஸ்டார்ட் பண்ணலாம்- டோனி

May 8, 2025
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்

Copyright @2023 Weboney. All rights Reserved

No Result
View All Result
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்

Copyright @2023 Weboney. All rights Reserved