நவ.14.
கரூர் தாந்தோணிமலையில் தனியார் பேருந்து கூண்டு கட்டும் நிறுவனம் உள்ளது. இங்கு இன்று பேருந்து ஒன்றின் கட்டுமான வேலைகள் முடிவடையும் நிலையில் மாலை சுமார் 6மணி அளவில் எதிர்பாராதவிதமாக அந்தப் பேருந்து தீப்பிடித்து எரியத் தொடங்கியது. அவர்களில் ஒரு சிலர் தப்பி வெளியேறிய நிலையில் ரவிச்சந்திரன் (42) என்பவர் பேருந்துக்குள் சிக்கிக் கொண்டார். வெளியே வர முடியாத நிலையில் உடல் கருகி உயிரிழந்தார்.கரூர் தீயணைப்பு படையினர் 1 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.
கரூர் உட்கோட்ட போலீஸ் டிஎஸ்பி செல்வராஜ் நேரில் சென்று விசாரணை நடத்தினர். தாந்தோணிமலை போலீஸார் வழக்குப் பதிவு காயமடைந்தவர்களை சிகிச்சைக்காகவும், ரவிச்சந்திரன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்து 2 மணி நேரத்துக்கு மேலாகியும் நிறுவன உரிமையாளர் சம்பவ இடத்துக்கு வராததால் தொழிலாளர்கள், போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.