ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காமல், ஓரவஞ்சனையான நிதி பகிர்வு அளித்து, நமது மாநிலத்துக்கு அநீதி இழைத்த ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி, அரவக்குறிச்சி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.. அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில், மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ. ஆயிரம் வழங்கும் திட்டத்தில் விடுபட்ட மகளிர் அனைவருக்கும் மூன்று மாதத்தில் உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவித்தார்.
தலைமை கழக பேச்சாளர்கள் சென்னை. த. அரங்கநாதன், நெல்லை ஜான் சிறப்புரையாற்ற இந்த கண்டன பொதுக்கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகர பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, கிளை நிர்வாகிகள், வட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.