ஏப்.6.
இயற்கை விவசாயதத்தில் கரூர் மாவட்ட மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண் சாதனை படைத்துள்ளார்.
கரூர் மாவட்டம், சித்தலவாய் ஊராட்சி, முனையனூர் கிராமத்தில் வசிக்கும் மேரி தனது சொந்த நிலத்தில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பண்ணை சார்ந்த வாழ்வாதார திட்டம் மூலம் இயற்கை விவசாயம் குறித்தும் மற்றும் இயற்கை பூச்சி விரட்டிகளை தயாரிப்பது குறித்தான பல்வேறு பயிற்சிகளை பெற்று, தற்போது அதனை நடைமுறை படுத்தி வருகின்றனர்.
இதற்கு முன்னர் தொடர்ச்சியாக இவர் செயற்கை உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகளை பயன்படுத்தியதால் மண்ணின் வளம் பாதித்ததோடு பூச்சி தாக்குதலையும் கட்டுப்படுத்த இயலாத நிலை மாறிவிட்டது.
இவருக்கு உறுதுனையாக, ஊரக வாழ்வாதார இயக்கம் இயற்கை விவசாயத்தினை ஊக்குவித்து இவர் இயற்கை விவசாயம் செய்து முதல் பயிரான கம்பு பயிரில் டோக்கியா -401 என்ற வீரிய ஒட்டு இரகத்தினை பயிரிட்டு ஏக்கருக்கு 1100 கிலோவும், இரண்டாம் பயிராக நிலக்கடலையில் சுதிரி இரகத்தினை பயிரிட்டு எக்கருக்கு 2200 கிலோ மகசூல் பெற்றுள்ளார். அது மட்டுமில்லாமல் மல்லிகை பூவிலும் இயற்கை விவசாயத்தினை கடைபிடித்து வருகின்றனர்.
சிறப்பு அம்சமாக தற்போது 2 முதல் 3 அடி நீளமுள்ள ராஜஸ்தான் உள்ளூர் இரக கம்பு இரகத்தினை 50 சென்டில் இயற்கை முறையில் சாகுபடி செய்துள்ளார். இவர் இதுவரை குப்பை உரம், அமிர்த கரைசல் மட்டுமே பயன்படுத்தினார். எவ்விதமான செயற்கை உரத்தினையும் பயன்படுத்தவில்லை. பூச்சி மருந்தினையும் பயன்படுத்தவில்லை இந்த 50 சென்ட் நிலத்தில் தனக்கு 800 முதல் 1000 கிலோ கம்பு மகசூல் எதிர்பார்க்கப்படுவதாகவும் சாகுபடி செலவும் குறைந்துள்ளதாகவும் கூறினார். எங்களுடைய வாழ்வாதாரத்தை உரிய நேரத்தில் உயர்திட உதவி செய்த மேலாண்மை இயக்குநர், கரூர் திட்ட இயக்குநர் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.